பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
233

1அவ

1அவ்வூரிலே கொடுபுகுகையும், இவள்பக்கல் நசை அறுகை என்பதும் பரியாயம். ஆயிட்டு ‘இவள் வேண்டா’ என்று அன்றோ கொடுபுக்கது என்கிறாள். 

    திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் - தன் சந்நிதானத்தாலே கிளராநின்றுள்ள திரைகளையுடைத்தான திருப்பாற்கடலிலே பிரமன் முதலாயினாருடைய கூக்குரல் கேட்கும்படியாகக் கண்வளர்ந்தருளினதுவும்; 2இவர்கள் துன்பம் கேட்டபின்பு இந்திரன் முதலானோர்கட்குக் குடியிருப்புப் பண்ணிக்கொடுக்க அடியிட்டபடியும். திசை ஞாலம் தாவி அளந்ததும் - திக்குக்களோடே கூடின பூமியை இரப்பாளனாயிருந்து வருத்தமின்றி வளர்ந்து அளந்தபடியும். திசைஞாலம் தாவி அளந்ததும் - 3‘இந்திரன் முதலானோர்களை ரக்ஷிக்கவேணும்’ என்ற ஆசையோடே காணும் பூமியை அளந்தது. ஆசை - திக்கு. ‘இவன் திருவடிகளாலே நம்மைத் தீண்டவேணும்’ என்று ஆசைப்பட்டுக் காணும் கிடக்கிறது பூமி. படுகை - உடைத்தாகை. பூமியினுடைய ஆசையாவது, திக்குப்பட்டு அன்றோ இருப்பது. நிரைகள் மேய்த்ததும் - அவ்வளவன்றிக்கே, அறிவு கேட்டுக்குத் தலையான பசுக்களோடே சேர்ந்து வாழ்ந்தபடியும். பிதற்றி - இவற்றையே அடைவுகெடக் கூப்பிட்டு. நெடும் கண் நீர்மல்க - இக்கண்ணில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறத் தண்ணீர் உண்டாவதே! நிற்குமே - பிதற்றவும் சக்தியில்லாமல், கண்ணீர் மல்குகை ‘தன்னுடைய குண நிலை’ என்னும்படி செயலற்று நில்லாநின்றாள்.

(3)

 

1. நாங்கள் அகற்றினோமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அவ்வூரிலே’ என்று தொடங்கி. ஆயிட்டு - ஆனபின்னர்,

2. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘இவர்கள் துன்பம்’ என்று
  தொடங்கி.

3. “சிதை ஞாலம் தாவி அளந்ததும்” என்றதற்கு, ரசோக்தியாகப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘இந்திரன் முதலானோர்களை’ என்று தொடங்கியும்,
  ‘இவன் திருவடிகளாலே’ என்று தொடங்கியும். “ஆசை” என்பதற்கு, திசை
  என்பதும் ஒருபொருள். ஆசை என்றால், விருப்பத்தையும் காட்டும்,
  திசையையும் காட்டும். திக்குப்பட்டு - அடைவுபட்டு.

  ஓலையை யவட்கு நீட்டி ஒண்மணிக் குழையு முத்தும்
  மாலையும் படுசொல் ஒற்றி வம்மென மறைய நல்கி
  வேலைநெய் பெய்த திங்கள் விரவிய பெயரி னாற்கு
 
மேலைநாட் பட்ட தொன்று விளம்புவல் கேளி தென்றாள்.

 
என்ற சிந்தாமணிச் செய்யுளையும், ‘திங்கள் - மதி : மதி எனவே புத்தி
  சேனனாம்; “தீத்தீண்டு கையார்” என்றது வேங்கையை உணர்த்தினாற்போல’
  என்ற அதனுரையையும் ஈண்டு நோக்கற்பாலன.