|
தல
தல்; வேறு ஓர் ஆபரணம்
வேண்டாதே தானே ஆபரணமான ஒளி என்னுதல்; அன்றிக்கே, ஆபரண ஒளி தன்னுள்ளே அடங்கும்படியான இயல்பாகவே
அமைந்த ஒளி என்னுதல். செந்தாமரைக் கண் பிரான் - மலர்த்தி முதலானவைகளுக்குத் தாமரையை ஒப்பாகச்
சொல்லலாயிருக்கிற திருக்கண்கள். 1அகவாயில் தண்ணளிக்குப் பிரகாசகமான திருக்கண்கள்.
பிரான் - 2“பக்தர்களுக்காகவே” என்கிற வடிவு, இருந்தமை காட்டினீர் - நீங்கள் கெடுத்தீர்கோள்.
3இவள் அறியாத விஷயங்களையும் நீங்களே காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர் கோள்.
இரூந்தமை - 4இருப்பில் வீறு அங்கே முடிந்து நிற்றல்போலே. 5நின்றானாகில்,
6“நிலையாரநின்றான்” என்பர்கள்; இருந்தானாகில், “இருந்தமை காட்டினீர்” என்பர்கள்;
கிடந்தானாகில், 7“கிடந்ததோர் கிடக்கை” என்பர்கள். 8அன்றிக்கே,
அவன் தன்மையைக் காட்டினீர்கோள் என்றுமாம். நோக்கு இருந்தபடி கண்டாயே, முறுவல் இருந்தபடி கண்டாயே
என்று தனித்தனியே காட்டினீர் என்பாள் ‘காட்டினீர்’ என்கிறாள்.
நன்று; இப்போது
அதற்கு வந்தது என்? என்னில், மழை பெய்தால் ஒக்கும் கண்ணநீரினொடு - கண்டவுடனே வருஷதாரைபோலே
கண்ணநீர் வெள்ளம் இடுகிறபடி பாரீர்கோள். ஆளவந்தார் மணக்
1. “செம்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அகவாயில்’ என்று
தொடங்கி.
2. “பிரான்” என்பதற்கு,
உபகாரகன் என்பது பொருளாகையாலே,
அவ்வுபகாரத்தை அருளிச்செய்கிறார் ‘பக்தர்களுக்காகவே’ என்று
தொடங்கி.
3. ‘நீங்கள் கெடுத்தீர்கோள்’
என்கைக்கு, நாங்கள் என் செய்தோம்? என்ன,
‘இவள் அறியாத’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
‘விஷயங்கள்’ என்றது, விசேஷங்கள் என்றபடியாய், விக்கிரஹத்தின்
அழகு,
கண்ணழகு முதலியவைகளைச் சொல்லுகிறது.
4. “இருந்தமை” என்றதனால்
பலித்த பொருளினை அருளிச்செய்கிறார்
“இருப்பில் வீறு” என்று தொடங்கி.
5. “இருந்தமை காட்டினீர்”
என்பது ஏன்? மற்றைய நிலைகளும் இனிமையாக
இராவோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘நின்றானாகில்’ என்று
தொடங்கி.
6. ‘நிலையார’ என்பது, பெரிய
திருமொழி, 6. 9 : 8.
7. திருமாலை, செய். 23.
8. “இருந்தமை”
என்பதற்கு, வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி. ஆக, “இருந்தமை”
என்பதற்கு, இருப்பின்
அழகு, தன்மை என இருபொருள் உரைத்தபடி.
|