பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
242

அன

    அன்னைமீர்! - 1இவள் பருவம் இது; நமக்கு அவ்வருகே போன ஆச்சரியத்தைப் பாரீர்கோள். ‘மைத்ரேய’ என்னுமாறுபோலே, ‘அன்னைமீர்!’ என்கிறாள். அணி மா மயில் சிறுமான் - 2அழகிய நிறத்தையுடைய பெண்பிள்ளை. அன்றிக்கே, அழகியதாய்ச் சிலாக்கியமான மயில் போலே இருக்கிற பெண்பிள்ளை என்னுதல். சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து - 3நாம் கற்பித்த திருநாமங்களையும் சொப்படச் சொல்லமாட்டாதவள் நமக்கு எட்டாதபடியானாள். கை வலித்தல் - கை கடத்தல். என வார்த்தையுங் கேட்குறாள் - 4தன் நினைவினை யான் சொல்லிலும் மீட்பதற்கு நினைத்துச் சொல்லுகிறேன் என்று, எனவார்த்தையையும் கேட்கை தவிர்ந்தாள். தொலைவில்லிமங்கலம் என்றல்லால் - 5திருத்தொலைவில்லிமங்கலம் என்னில் நான் சொன்னதையும் கேட்பாள். என வார்த்தை - என்னுடைய வார்த்தை.

    முன்னம் நோற்ற விதிகொலோ - 6ஒக்கப் பிறந்து வளர்ந்தோம், பின்பு இது சாதிக்கக் கண்டிலோம். ஆதலால், முன்னரே செய்து

 

1. “அன்னைமீர் என்ன வார்த்தையும் கேட்குறாள்” என்று கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘இவள் பருவம்’ என்று தொடங்கி. “அன்னைமீர்”
  என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘மைத்ரேய’ என்று தொடங்கி.

2. “அணிமாமயில்” என்பதற்கு, இருவகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
  முதற்பொருளுக்கு, ‘அணிமாமைஇல்’ என்பது சொல். அது, “அணிமாமயில்”
  என ஐகாரம் அகரமாகத் திரிந்து வந்தது. அணி - அழகு. மாமை - நிறம்.
  இல் - இருப்பிடம். இதனாற் பலித்த பொருள், அழகிய நிறத்தையுடைய
  என்பது. இதனையே ‘அழகிய நிறத்தையுடைய பெண்பிள்ளை’ என்கிறார்.

3. ‘இவள் பருவம் இது’ என்று தொடங்கி, மேலே அருளிச்செய்த வாக்கியத்தை
  விவரணம் செய்கிறார் ‘நாம் கற்பித்த’ என்று தொடங்கி. சொப்பட - நன்றாக.
  “சொப்படநான் சுட்டுவைத்தேன்” “சொப்பட நீராடவேண்டும்” என்பன
  பெரியாழ்வார் திருமொழி. ‘சொப்பன’ என்பது, முன்னுள்ள பாடம்.

4. “என்ன வார்த்தையும்” என்று விசேடித்ததற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
  ‘தன் நினைவினை’ என்று தொடங்கி.

5. ஆயின், எல்லாம் அப்படியேயோ? என்ன, அதற்கு விடை அருளிச்
  செய்கிறார் ‘திருத்தலை வில்லிமங்கலம்’ என்று தொடங்கி.

6. முன்னம் நோற்ற” என்று விசேடிப்பான் என்? இப்போது செய்த
  புண்ணியத்தின் பலமானாலோ? எனின், அதற்கு விடை அருளிச் செய்கிறார்
  ‘ஒக்கப் பிறந்து’ என்று தொடங்கி. “அவளும் உடன்பிறந்து, உடன் வளர்ந்து,
  நீர் உடனாடி, சீர் உடன்பெருகி, ஒல் உடன் ஆட்ட, பால் உடன் உண்டு,
  பல் உடன் எழுந்து, சொல் உடன்கற்று, பழமையும் பயிற்றியும் பண்பும்
  நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியு முடையார் பற்பல் நூறாயிரவர்”
  என்பது, இறையனார் களவியல் உரை.

(சூத். 2.)