|
New Page 1
வைத்த புண்ணியத்தின்
பலமோ இது! 1“புண்ணியமானது, விதி என்றும் விதானம் என்றும் சொல்லப்படுமன்றோ”
என்னக்கடவதன்றோ. 2இவளாலே செய்யப்பட்ட தர்மத்துக்கு இத்தனைபலம் கனக்க உண்டாகமாட்டாது;
இது சித்த தர்ம பலமாகவேணும்; ஆகையால், முகில்வண்ணன் மாயம்கொலோ - 3பிடாத்தை
விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? 4இத்தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு
இத்தனை கனத்த பலம் உண்டாகமாட்டாமையாலே ‘முன்னம் நோற்ற விதிகொலோ?’ என்று ஐயப்பட்டாள்.
இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில்வண்ணன் மாயம்கொலோ?’ என்று
இங்கே ஐயப்படுகிறாள். அவன் சின்னமும் திருநாமமும் - “தவளொண்சங்கு சக்கரம்” என்பதான அடையாளங்களும்,
“அரவிந்தலோசனன்”, “தேவபிரான்” என்பனவான திருநாமங்களும். இவள் வாயனகள் திருந்தவே
- 5பண்டே திருந்தி இருக்கிறவை இவள் சொல்லப் புக்கவாறே உயிர்பெற்று இராநின்றன.
6பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்றால் திருநாமம் நிறம்பெறுமாறு
போலேயும், சோமாசியாண்டான்
1. “விதி” என்பது, புண்ணியத்தைக்
காட்டுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘புண்ணியமானது’ என்று தொடங்கி. “ஊழ்;
அஃதாவது,
இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாய நியதி.
ஊழ், பால், முறை, உண்மை,
தெய்வம், நியதி, விதி என்பன ஒரு
பொருட்கிளவி” என்பது பரிமேலழகருரை.
2. மேலே வருகின்ற பதங்கட்கு
அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘இவளாலே’
என்று தொடங்கி.
3. ‘இறைவன்’ என்னாமல்,
“முகில்வண்ணன்” என்று விசேடித்ததற்குக் கருத்து
அருளிச்செய்கிறார் ‘பிடாத்தை’ என்று தொடங்கி.
பிடாத்தை -
பச்சைவடத்தை; இது ஓர் உடை விசேடம்.
4. “முகில்வண்ணன் மாயமே”
என்று நிச்சயிக்கவேண்டியிருக்க, அங்ஙனம்
செய்யாது, இரண்டு வகையிலும் ஐயப்படுவான் என்? என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இத்தலையாலே’ என்று தொடங்கி. ‘அசேதநமான
கிரியை’ என்றது,
புண்ணியத்தை. ‘இப்படி’ என்று தொடங்கும் இவ்விடத்தில்,
முதற்பத்து ஈட்டின் தமிழாக்கம், பக்.
16. காணல் தகும்.
5. முன்பே திருந்தி இருக்கவில்லையோ?
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பண்டே’ என்று தொடங்கி. என்றது, பிராவண்யத்தாலே
சொல்லுமவை நிறம் பெற்றிருக்கும் என்றபடி.
6. ‘பிராவண்யத்தாலே
சொல்லுமவை நிறம்பெற்றிருக்கும்’ என்பதற்குச்
சம்வாதம் காட்டுகிறார் ‘பட்டர்’ என்று தொடங்கி.
|