பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
254

    வி-கு :- தேவபிரானையே தந்தை தாய் என்று சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அடைந்த சடகோபர் என்க-சொன்ன செந்தமிழ் இவைபத்தும் என்க.

    ஈடு :- முடிவில் இத்திருவாய்மொழியின் கருத்தை விளக்கிக் கூறுவதாய்க் கொண்டு, இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

    சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் - மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட அவன் பக்கலிலே ஈடுபட்டனவாய் இருக்கிறபடி. 2“இரங்கி” என்றும், “மணிவண்ணவோ” என்றும், “தன் கரங்கள் கூப்பித் தொழும்” என்றும் என்னும் இம்மூன்றாலும் இவர்க்கு உண்டான ஈடுபாட்டின் மிகுதியன்றோ இத் திருவாய் மொழியிற்சொல்லிற்று. தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த - அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாயிருந்து வைத்துத் தொலைவில்லி மங்கலத்திலே சுலபனாயிருந்தவனே எல்லாவிதமான உறவும் என்று அறுதியிட்டபடியே பற்றுவதும், செய்தவர். ’ண்குருகூரவர் சடகோபன் - அவனே இவர்க்கு எல்லாவித உறவும் ஆனாற்போன்று அவ்வூரிலுள்ளார் ஆழ்வாரையே எல்லா உறவு முறையாகப் பற்றியாயிற்று இருப்பது. 2“அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்” என்றும், “தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே” என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள். முந்தை ஆயிரத்துள் -

 

1. “பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே” என்றதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. மூன்று கரணங்களும் ஈடுபட்டமை மேலே சொல்லப்பட்டதோ? என்ன,
  ‘ஆம்’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘“இரங்கி” என்றும்’
  என்று தொடங்கி.

3. அவ்வூரிலுள்ளார் அப்படி இருந்தார்கள் என்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார் ‘அன்னையாய்’ என்று தொடங்கியும், ‘தாயும் தமப்பனும்’
  என்று தொடங்கியும். ‘அன்னையாய்’ என்பது, கண்ணி நுண் சிறுத்தாம்பு.
  ‘தாயும் தமப்பனும்’ என்பது, தோத்திரரத்நம்.

  மாதாபிதா யுவதய: தநயா விபூதி:
  ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
  ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம்
  ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா”

 
என்பது, தோத்திர ரத்நம். 5.