1ப
1பழையதான
வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே. சர்வேசுவரன் இதர சஜாதீயனாய் அவதரித்தாற் போல, வேதமும்
தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்தபடி என்னுதல். இவை தொலைவில்லி மங்கலத்தைச்
சொன்ன செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலுக்கு அடிமைசெய்வார் - இதனைக்கற்கவல்லவர்கள் திருமகள்
கேள்வடுக்கு அடிமைசெய்யப் பெறுவர். செந்தமிழ் - செவ்விய தமிழ்; பசுந்தமிழ்; அர்த்தத்தைத்
தெளிவாகக்காட்டுவது. பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளையபெருமாள் அடிமை செய்தாற்போலே,
சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் என்பார் 2திருமாலுக்கு அடிமை செய்வார்’
என்கிறார்.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
துவளறுசீர் மால்திறத்துத்
தொன்னலத்தால் நாளும்
துவளறுதன் சீலமெல்லாம்
சொன்னான் - துவளறவே
முன்னம் அநுபவத்தில்
மூழ்கிநின்ற மாறனதில்
மன்னுமுவப் பால்வந்த மால.
(55)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
1. தாம் இப்போது
அருளிச்செய்ததாக இருக்க, “முந்தை ஆயிரம்” என்பது
என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பழையதான’ என்று
தொடங்கி. வேறும் ஒரு காரணத்தை அருளிச்செய்கிறார் ‘சர்வேசுவரன்’
என்று தொடங்கி.
2. “திருமாலுக்கு அடிமைசெய்” என்பது, ஒளவையார் வாக்கு.
|