ஆற
ஆறாந் திருவாய்மொழி
- “மாலுக்கு”
முன்னுரை
ஈடு :-
1மேல்
திருவாய்மொழியிலே இவளுக்குப் பிறந்த தசை முற்றி வியசனம் அதிகரிக்கையாலே மயங்கினவளாய்க்
கிடக்க, அது கண்டு ஆற்றாளாய் இவளுடைய தோழியும் மயங்க, இந்த நிலையிலும் இவளைப் பிழைப்பதற்குரிய
விரகுகளை எண்ணுகையாலே தரித்திருக்கிற திருத்தாயார் இவளுடைய வளயம் முதலானவைகள் காணக் காண
உருக்குலைகிறபடியைக் கண்டு, அவற்றைத் தனித் தனியே சொல்லிக் கூப்பிடுகிறாள். 2ஒவ்வொரு
நகரம் பத்தநம் முதலானவைகள் வேவப்புக்கால், ‘ஒருமாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது’ என்பாரைப்போலே.
3மேல் திருவாய்மொழியிலே பெறாத நிலைமையாய், ‘கிடையாது’ என்றாலும் விடமாட்டாதபடி
தம்முடைய மனம் வாக்குக் காயங்கள் அவ்விஷயத்திலே மிக்க ஈடுபாடு உண்டானபடி சொல்லிற்று; இதில்,
அந்த அலாபத்தால் வந்த பரவசப்பட்ட தன்மையைச் சொல்லுகிறது. 4“நெடுமால் என்றே
கூவுமால்” என்று தன்னுடைய வியாமோகத்தைக் காட்டியாயிற்று இவளை இப்படி விளைத்தது; 5பெரியவன்
தாழ நின்றால் பொறுக்க
1. மேல் திருவாய்மொழி தோழி
வார்த்தையாக இருக்க, இந்தத் திருவாய்மொழி
தாய் வார்த்தையாதற்குக் காரணம் யாது? என்னும்
சங்கையிலே இயைபு
அருளிச்செய்கிறார் ‘மேல் திருவாய்மொழியிலே’ என்று தொடங்கி.
2. இதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘ஒவ்வொரு நகரம்’ என்று தொடங்கி.
பத்தநம் - பேட்டை. ‘வேவப்புக்கால்’ என்றதற்குத்
தகுதியாக,
விரஹாக்நியினாலே தன்மகள் இழந்தனவற்றைச் சொல்லுகிறாள் என்று
தார்ஷ்டாந்திகம்
கண்டுகொள்வது.
3. மேல் திருவாய்மொழியும்
இத்திருவாய்மொழியும் பிரிவினைச் சொல்லுவதாக
இருப்பினும், அதற்கும் இதற்கும் உள்ள வேற்றுமையினைக்
காட்டுகிறார்
‘மேல் திருவாய்மொழியிலே’ என்று தொடங்கி.
4. இதற்குரிய காரணத்தை
அருளிச்செய்கிறார் “நெடுமால்” என்று தொடங்கி.
5. அவன்
வியாமோகம் கண்டால் இவள் இப்படி ஈடுபடவேண்டுமோ? என்ன,
‘பெரியவன்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
|