பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
262

    வி-கு :- பிறங்கிருங் கூந்தல் : அன்மொழித் தொகை. கறங்குதல் - கழலுதல்.

    ஈடு :-
மூன்றாம்பாட்டு. 1ஆலிலையில் சயனித்தவனுடைய படிகளிலே அகப்பட்டு இவள் தன் பெருமையை இழந்தாள் என்கிறாள்.

    நிறம் கரியானுக்கு - 2“இழந்தது மாமைநிறம்” என்றாள்; அந்த நிறமும் அவன் பக்கலிலே கிடக்கையாலே இரட்டித்துக் காட்டிற்று வடிவு. 3தன் நிறத்துக்கு மேலே ஒருநிறம் உண்டாயிற்று. “நீலக் கருநிற மேக நியாயற்கு” என்ன வேண்டாவாயிற்று; நிறத்துக்கு ஒப்பாக மாட்டாமையாலே. நெய்த்துக்குளிர்ந்து சிரமத்தைப் போக்குகின்ற வடிவினையே சொல்லுகிறாள். நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் - பரப்பையுடைத்தான பூமியைத் திருவயிற்றிலே வைத்த பிரகாரத்தைக் கோட் சொல்லாநின்ற திருவதரத்தையுடைய. கிளருகை - சொல்லுகை. 4“வையம் ஏழும் கண்டாள் பிள்ளைவாயுளே” என்னக்கடவதன்றோ. ரக்ஷிக்குந்தன்மையை விளக்கிக் காட்டுகின்ற திருவதரம். சிறுக் கள்வனவர்க்கு - 5சிறுவயிற்றிலே பெரிய உலகங்களை வைத்து, அளவிட முடியாத செயலையுடையவ

 

1. “நீடுலகுண்ட” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “நிறம் கரியானுக்கு” என்றதற்கு, பாவம் அருளிச் செய்கிறார் ‘இழந்தது
  மாமை’ என்று தொடங்கி. என்றது மேலே “நீலக் கருநிறமேக நியாயற்கு”
  என்று மேகத்தை ஒப்பாகச்சொல்லிப் பார்த்தாள், அது ஒப்பாக
  மாட்டாமையாலே மேகத்தை நீக்கி, “நிறம் கரியான்” என்று “நீலக்
  கருநிறம்” என்றதனையே சொல்லுகின்றாள் என்றபடி. இரட்டித்துக்
  காட்டுகையாலே ஒப்பு இல்லை என்க.

3. அதனை விவரணம் செய்கிறார் ‘தன் நிறத்துக்குமேலே’ என்று தொடங்கி.
  இதற்குக் காரணம் யாது? என்ன, ‘நீலக் கருநிறம்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். அதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘நிறத்துக்கு’
  என்று தொடங்கி.

4. அப்படிக் கோட்சொல்லுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘வையம் ஏழும்’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திருமொழி, 1. 1 : 6.
  இதனால் பலித்த பொருளை அருளிச் செய்கிறார் ‘ரக்ஷிக்கும் தன்மையை’
  என்று தொடங்கி.

5. சிறியவனாக இருக்கச்செய்தே களவு ஏது? என்ன, பாலனாயிருக்கச்செய்தே
  அளவிடமுடியாத அதிமானுஷ சேஷ்டிதங்களையுடையனாயிருக்கை
  என்கிறார் ‘சிறு வயிற்றிலே’ என்று தொடங்கி.