பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
267

நீர்மையையுடைய வேதம். பயந்த - 1தூங்கினவன் எழுந்தான் என்ற கணக்கிலே பிரமனுக்குக் கற்பிக்கை. பரனுக்கு-2“அந்தப் பகவான் உலகங்களைப் படைப்பதற்கு முன்பு பிரமனைப் படைத்து அவனுக்கு வேதங்களை உபதேசித்தார்” என்கிறபடியே, பிரமனுக்கு வேதங்களாகிய கண்களைக் கொடுக்கையாலும், வேதங்களிலேயே அறியப்படுகின்றவன் ஆகையாலும் எல்லோரைக்காட்டிலும் மேலானவனுக்கு. 3அறிவு இழய்தார்க்கு அறிவு கொடுக்குமவன் கண்டீர் இவள் அறிவை அழித்தான். மண்புரைவையம் - மண்மிக்க பூமி. இடந்த வராகற்கு-4மண்ணோடு விண்ணோடு வாசி அறத் தன்முகத்தால் ரக்ஷித்தபடி. 5பிறருடைய சொரூப சித்திக்காகத் தன்னை அழியமாறுமவன். 6அழிவுக்கு இட்டவடிவுக்கு ஆலத்தி வழிக்கவேண்டும்

 

1. நித்தியமான வேதத்தைப் பயந்தான் என்பது எப்படி? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தூங்கினவன்’ என்று தொடங்கி. ‘தூங்கினவன்
  எழுந்தான் என்ற கணக்கிலே’ என்னும் இவ்விடத்தில்

  ஸம்ஸ்காரம் ப்ரதி ஸஞ்சரேஷு நிததத் ஸர்கேஷு தத்ஸ்மாரிதம்
  ரூபம்நாமச தத்ததர்ஹ நிவஹே வ்யாக்ருத்ய ரங்காஸ்பத
  ஸு ப்தோத்புத்த விரிஞ்சபூர்வஜநதாம் அத்யாப் யதத்தத்திதம்
  சாஸந்நஸ்ம்ருத கர்த்ருகாந் வஹஸி யத்வேதா: பிரமாணம் தத:

  என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 17-வது சுலோகம் அநுசந்தேயம்.

2. ‘அந்தப் பகவான்’ என்று தொடங்கும் பொருளையுடைய சுருதி,
  “யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி
  தஸ்மை” என்பது. இது, ஸ்வேதாஸ்வதரம்.

      மேற்பாசுரத்தில், “யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்பதனையும்,
  இப்பாசுரத்தில் “யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை”
  என்பதனையும் சொல்லுகிறது என்று அருளிச்செய்வர்.

3. “பண்புடை வேதம் பயந்த பரனுக்கு, கற்பு இழந்தான்” என்கிற
  திருத்தாயாருடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘அறிவு
  இழந்தார்க்கு’ என்று தொடங்கி.

4. முதல்வரியையும் சேர்த்துக்கொண்டு “இடந்த வராகற்கு” என்பதற்கு,
  ரசோக்தியாக அருளிச் செய்கிறார் ‘மண்ணோடு’ என்று தொடங்கி.
  மண்ணைத் தன் முகத்தால் ரக்ஷிக்கையாவது, திருவயிற்றிலே வைத்து
  ரக்ஷிக்கை. விண்ணைத் தன் முகத்தால் ரக்ஷிக்கையாவது, அன்னத்தின்
  உருவமாய் வேதத்தை உபதேசித்து ரக்ஷிக்கை.

5. விகாரம் பொருந்திய வராகவேடத்திற்குக் கற்பு இழக்கக் கூடுமோ? என்ன,
  ‘பிறருடைய’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது,
  குணத்திற்கு ஈடுபட்டாள் என்றபடி.

6. குணத்திற்கே யன்றி அழகிற்கும் ஈடுபட்டாள் என்கிறார் ‘அழிவுக்கு’ என்று
  தொடங்கி. அழிவுக்கு இட்டவடிவாவது, தன் மேன்மையை விட்டு
  நீர்மையைக் கொள்ளுகைக்கு ஈடாகக் கொண்ட வராக வேடம்.