பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
268

படி யன்றோ இருப்பது. 1“மானமிலாப் பன்றியாம்தேசு” என்னக் கடவதன்றோ. 2“மண் மிகுதி சொல்லிற்று, எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக. வராகற்கு 3அல்லாத ரக்ஷணம்போல் அன்றியே, எல்லார்க்கும் ஏற முக்கியமான ரக்ஷணம் இதுவன்றோ. 4“எயிற்றிடை மணகொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்” என்கிறபடியே, இவளைப் போன்றார்க்கு ஞானத்தைக் கொடுக்கிறவன் இவளை அறிவு அழித்தான்.

    தெண் புனல் பள்ளி - தெளிந்த புனலையுடைய ஏகார்ணவத்தைப் படுக்கையாகவுடையவன். 5அழிந்த உலகத்தைப் படைத்து, படைக்கப்பட்ட சேதநர்க்கு அறிவு கொடுக்கக் கிடக்கிறவனுக்கு. 6சத்தையே பிடித்து உண்டாக்கி அறிவு கொடுக்கக்கடவ அவன்

 

1. அப்படி அழகியதாக இருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
  ‘மானமிலாப்பன்றி’ என்று தொடங்கி. இது நாய்ச்சியார் திருமொழி, 11. 8,

2. “மண்புரை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘மண்மிகுதி சொல்லிற்று’
  என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. மேலே கூறிய ரக்ஷணம் போன்று தேகத்தைப் பூண்கட்டிக் கொடுக்கை
  அன்றிக்கே, ‘ஸ்திதே’ என்றும், ‘ததஸ்தம்’ என்றும் தொடங்குகிற இரண்டு
  சுலோகங்களை உபதேசித்த காரணத்தாலே பிறவிக் கடலில் நின்று கரை
  ஏற்றும்படியான அவதாரம் என்று கூறத் திருவுள்ளம் பற்றி ரசோக்தியாக
  அருளிச்செய்கிறார் ‘அல்லாத ரக்ஷணம்’ என்று தொடங்கி. ‘எல்லார்க்கும்
  ஏற’ என்பதற்கு, எல்லாரும் பிறவிக்கடலில் நின்றும் கரை ஏறுவதற்கு
  என்பது நேர்பொருள். எல்லாரும் சம்மதிக்க என்பது வேறும் ஒருபொருள்.

  ஸ்திதே மனஸி ஸு ஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
  தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமகம்.

(1)

  ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
  அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதிம்.

(2)

  என்பன வராக சரமம்.

4. “வராகற்குக் கற்பு இழந்தாள்” என்கிறவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘எயிற்றிடை’ என்று தொடங்கி. இது பெரியாழ்வார்
  திருமொழி, 5. 2 : 3. ‘இவளைப் போன்றோர்க்கு’ என்றது, பெரியாழ்வாரை.

5. “தெண்புனல்பள்ளி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அழிந்த
  உலகத்தை’ என்று தொடங்கி. ‘அழிந்த உலகத்தைப் படைத்து’ என்றது,
  “நான்முகனைப் படைத்தானுக்கு” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

6. இங்ஙனம் சொல்லுகிற திருத்தாயாருடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘சத்தையே பிடித்து’ என்று தொடங்கி.