க
களையும் சரீரமாகவுடையவனாய்
அவற்றின் குற்றங்கள் தன்பக்கல் தட்டாமலே நிற்கின்ற மாயவனுக்கு, அறிவுடைய என் மகளானவள்
மரியாதையை இழந்தாள்.
வி-கு :-
மல் - மல்லர்கள். கற்பு - கல்வி; அறிவு.
கட்டு - உலக மரியாதை. பெண்களுக்குள்ள மரியாதையுமாம்.
ஈடு :-
பத்தாம்பாட்டு. 1பரத்துவம் என்ன, அவதாரம்
என்ன, உலகமே உருவமாயிருக்கும் தன்மை என்ன இவற்றை யடங்கக் காட்டி இவள் உடைமை எல்லாவற்றையும்
கொண்டான் என்கிறாள்.
பொற்பு அமை நீள்முடி
பூந்தண் துழாயற்கு-அழகு சமைந்திருப்பதாய் ஆதிராஜ்யப் பிரகாசகமான திருமுடியின் மேலே இறைமைத்தன்மைக்கு
அறிகுறியான திருத்துழாய் மாலையை யுடையவனுக்கு; தன்னுடைய பரிசத்தாலே பூத்துச் சிரம ஹரமாயிருத்தலின்
‘பூந்தண்துழாய்’ என்கிறாள். மல் பொரு தோளுடை மாயம் பிரானுக்கு-வந்து அவதரித்து மற்பொரு
தோளையுடையனாயிருக்கை. சாத்தின சாந்து அழியாதபடி மல் பொருத ஆச்சரியத்தையுடையவனாதலின்
‘மாயப் பிரான்’ என்கிறாள். 2சாவத் தகர்த்த சாந்து அணி தோளன் அன்றோ.
ஸ்ரீ மதுரையிற் பெண்களுக்கு அழகினை உபகரித்தவனாதலின் ‘பிரான்’ என்கிறாள். அன்றிக்கே,
மற்றும் ஆச்சரியமான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்றுமாம். நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு
- தாவர சங்கமங்களான எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே, அவற்றின்
தோஷங்கள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கிற ஆச்சரியத்தையுடையவனுக்கு. என் கற்புடையாட்டி -
மிக்க அறிவையுடைய என்மகள். 3“என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத்
தக்கதாம்” என்று இருக்குமவள் அன்றோ.
1. “பொற்பமை நீண்முடி”
என்பது போன்றவைகளால், பரத்துவம்.
“மற்பொருதோளுடை” என்பது போன்றவைகளால். அவதாரம்,
“நிற்பன
பல்லுருவாய் நிற்கும்” என்பதால், உலகமே உருவமாயிருக்கும் தன்மை.
2. “சாவத்தகர்த்த” என்பது,
பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.
3. மிக்க அறிவு எது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘என்னை
அழைத்துக்கொண்டு’ என்று தொடங்கி.
“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 39
: 30.
|