பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
277

இழந

இழந்தது கட்டே - 1தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான். கட்டு - முழுதும். ‘கட்டு’ என்று மரியாதையாய், உலக மரியாதையை இழந்தாள் என்றுமாம்.

(10)

618.

        கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனைக்
        கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
        கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
        கட்டெழில் வானவர் போகம்உண் பாரே.

   
பொ-ரை :- செறிவினையுடைய அழகுபொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட சிறந்த திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனை, அரண்களின் அழகையுடைய தெற்குத் திக்கிலேயுள்ள திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட அழகிய தொடைகளையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் நித்திய சூரிகளுடைய அனுபவத்தை அனுபவிப்பார்கள்.

    ஈடு :- முடிவில், 2இத் திருவாய்மொழியினை வல்லவர்கள் நித்தியசூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை அநுபவிப்பார்கள் என்கிறார்.

    கட்டு எழில் சோலை - பரிமளத்தையுடைத்தான நல்ல சோலை. கடி என்ற சொல், ‘கட்டு’ என்று வந்தது; வலித்தல் விகாரம். கடி - வாசனை. நல்வேங்கடம் - 3சேஷசேஷிகள் இருவர்க்கும் உத்தேசியமான திருமலை. வாணன் - நிர்வாஹகன். திருவேங்கடமுடையானை யாயிற்றுக் கவிபாடிற்று. 4“திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாக. என்னாவில் இன்கவி யான் ஒரு

 

1. “பொற்பமை நீண்முடி” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்துத்
  ‘தனக்குள்ளவற்றை’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. “இப்பத்தும் வல்லவர்கள் கட்டெழில் வானவர் போகம் உண்பாரே”
  என்பதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. நன்மை எது? என்ன, ‘சேஷசேஷிகள்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், கைங்கரியம் செய்தற்கு ஏகாந்தமான நிலமாகையாலே
  சேஷபூதனுக்கு உத்தேசியம்; இவனை அடிமை கொள்ளுவதற்கு
  ஏகாந்தமநன நிலமாகையாலே சேஷிக்கு உத்தேசியம் என்றபடி.

4. திருவேங்கடமுடையானையோ கவிபாடினார்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘திருவேங்கடத்து’ என்று தொடங்கி. இது, திருவாய்.
  3. 9 : 1.