பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
278

வர

வர்க்கும் கொடுக்கிலேன்” என்று இருக்கும் அவர் அன்றோ. கட்டு எழில் தென்குருகூர்-அரணையுடைய திருநகரி. கட்டு-அரண். ணூட்டு எழில் ஆயிரம் - அழகிய தொடைகளையுடைத்தாயிருக்கை. கட்டு-தொடை. கட்டு எழில் வானவர் - கட்டடங்க நல்லவரான நித்திய சூரிகள். அன்றிக்கே, ‘கட்டு’ என்பது, போகத்திற்கு விசேடணமாகவுமாம். என்றது, சம்சாரத்தில் போகங்கள் கர்மங் காரணமாக வருகையாலே அல்பமாய் நிலையற்றவையாய் இருக்கும் அன்றோ. இது, சொரூபத்துக்குத் தக்கது ஆகையாலே நிறைந்ததாய் நித்தியமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, நான்கு அடிகளிலுமுள்ள ‘கட்டு’ என்ற சொல்லிற்கு, முழுதும் என்றே பொருள் கோடலுமாம். 1நீர்மைக்கு எல்லையான திருமலை பற்றுதற்குரிய தலம்; மேன்மைக்கு எல்லையான பரமபதம் அநுபவத்திற்குரிய தலம். 2ஒன்றி ஆக்கை புகாமை உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        மாலுடனே தான்கலந்து வாழப் பெறாமையால்
        சாலநைந்து தன்னுடைமை தானடையக் - கோலியே
        தானிகழ வேண்டாமல் தன்னைவிடல் சொல்மாறன்
        ஊனமறும் சீர்நெஞ்சே! உண்

(56)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

 

1. “திருவேங்கடமுடையானைச் சொன்ன இப்பத்தும் வல்லவர் வானவர்
  போகம் உண்பார்” என்றதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார்
  ‘நீர்மைக்கு’ என்று தொடங்கி.

2. திருமலை அடையத்தக்க தலம் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்
  ‘ஒன்றி’ என்று தொடங்கி. இது, திருவாய். 9. 3 : 8.