ஏழ
ஏழாந் திருவாய்மொழி
- “உண்ணுஞ்சோறு”
முன்னுரை
ஈடு :-
1மேல்
திருவாய்மொழியிலே, மோகித்துக் கிடக்கிற தன் மகளுடைய துன்பத்தைக் கண்ட திருத்தாயாரானவள்,
‘அது போயிற்றது, இது போயிற்றது’ என்று அவன் திருநாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு இவள் தானும்
மோகித்தாள்; அவன் திருநாமத்தைச் சொல்லுகையாலே பெண்பிள்ளை உணர்ந்து எழுந்து புறப்பட்டுத்
திருக்கோளூர் ஏறப்போனாள்; 2திருத்தாயாரும் வாசனையாலே உணர்ந்து படுக்கையைப்
பார்த்தாள்; வெறும் படுக்கையாய்க் கிடந்தது; 3இனி, இவள் என் வயிற்றிற் பிறப்பாலும்,
தன் தன்மையாலும், இங்கு இருந்த நாட்களில் தேகயாத்திரை இருந்தபடியாலும் இவள் திருக்கோளூர்
ஏறப்புறப்பட்டுப் போயினாள் என்று அறுதியிடுகிறாள்.
4வளையம்
முதலாயினவற்றை எல்லாம் இழந்தாளேயாகிலும் நாம் இவளை இழக்கவேண்டி இராது என்றே இருந்தாள் மேல்
1. மேல் திருவாய்மொழியில்,
தன்னுடைய நிலையினைத் திருத்தாயார்
பேசவேண்டும்படி மயங்கி இருந்த இவள், இத்திருவாய்மொழியில்,
அருகில்
இருக்கிற திருத்தாயாரும் அறியாமல் திருக்கோளூர் செல்லுதல் யாங்ஙனம்?
மயங்கியிருந்த
இவள் உணர்ந்துதானே செல்லவேண்டும்; இவள்
உணர்ந்தபடி யாங்ஙனம்? என்கிற சங்கையிவே அருளிச்செய்கிறார்
‘மேல்
திருவாய் மொழியிலே’ என்று தொடங்கி.
2. மயங்கிக் கிடந்த திருத்தாயார்
உணர்வதற்குக் காரணம் யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘திருத்தாயாரும்’ என்று தொடங்கி.
3. திருக்கோளூர் சென்றமையை
என்கொண்டு அறுதியிடுகிறான்? என்ன,
‘இனி, இவள்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
இத்திருவாய்மொழியில்
வருகின்ற “என் இளமான்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘என்வயிற்றிற் பிறப்பாலும்’ என்கிறார்.
“என்” என்றது,
திருக்கோளூரில் மிக்க ஈடுபாட்டினையுடைய என்னுடைய என்றபடி. ‘தன்
தன்மையாலும்’
என்றது, “இளமான்” என்ற இடத்தில், இளமையாலே
மிருதுத் தன்மையைச் சொல்லி, அதனாலே தூரத்திலே
செல்லமாட்டாத
தன்மையைக் குறித்தபடி. ‘தேகயாத்திரை இருந்தபடியாலும்’ என்றது,
“உண்ணும் சோறு”
என்பது போன்றவைகளைத் திருவுள்ளம்பற்றி.
“திண்ணம்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘அறுதி இடுகிறாள்’
என்கிறார்.
4. மேல் திருவாய்மொழியிலும்
ஆற்றாமை உண்டே, அதில் இதற்கு வேற்றுமை
யாது? என்ன, ‘வளையம்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
|