பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
280

திருவாய்மொழியில். இத் திருவாய்மொழியில், இவள் தன்னையும் இழந்தோம் என்று கூப்பிடுகிறாள். 1ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்சவேண்டுவது” என்று கேட்க, “இருவராகப் போனவர்கட்கு வயிறு எரியவேணுமோ? தனிவழியே போனவளுக்கன்றோ வயிறு எரியவேண்டுவது!” என்று இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்சவேணும்; தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச்செய்தார். அதற்கு அடி, இருவரும் இருவர்க்கும் 2ஊமத்தங்காயாய், கடித்ததும் ஊர்ந்ததும் அறியார்கள்: 3இவள் அங்கே புக்கல்லது தரியாள் என்பதாம். 4“அள்ளல் அம்பூங்கழனி அணி ஆலி புகுவர்கொலோ!” அன்றியே, இலங்கையின் வாசலிலே புகுவர்கொலோ! என்றே அன்றோ அங்கே வயிறு பிடி. 5ஆனாலும், எங்கேும் போகிலும் இருவராயல்லது இராது அங்கு; ‘தனியே சென்ற இவள் என்படுகிறாளோ?’ என்று மிகவும் நொந்து கூப்பிடுகிறாள் இவளுடைய திருத்தாயார்.

 

1. இத் திருத் தாயார்க்கு மகளைப் பிரிந்த துக்கமும், தனிவழியே போன
  துக்கமுமாகிய இரண்டும் உண்டாகையாலே, அவற்றுள், பிரிவால் வந்த
  துக்கத்தை மேல் திருவாய்மொழியில் அருளிச்செய்து, தனி வழி
  சென்றமையால் வந்த துக்கத்துக்குச் சூசக சம்வாதம் காட்டுகிறார்
  ‘ஆளவந்தார்’ என்று தொடங்கி. “கள்வன்கொல்” என்றது, பெரிய
  திருமொழி, 3. 7 : 1.

2. ‘ஊமத்தங்காயாய்’ என்றது, ஊமத்தங்காயானது, தன்னைத் தின்றார்க்குத்
  தான் மயக்கத்தை உண்டுபண்ணுமாறு போலே, அந்யோந்ய
  வைலக்ஷண்யங்களாலே ஒருவர்க்கு ஒருவர் மயக்கத்தை
  உண்டுபண்ணுமவராய் என்றபடி. “அகலகில்லேனிறையும்”, “பித்தர்
  பனிமலர்மேல் பாவைக்கு” என்பன ஈண்டு நினைக்கத்தகும்.

3. ‘இவள் அங்கே புக்கல்லது தரியாள்’ என்றது, இத்திருவாய் மொழியில்
  வருகின்ற “திண்ணம்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

4. ‘இருவராய் போனவர்கள் ஆகையாலே இருவர்க்கும் அஞ்ச வேண்டும்’
  என்பதற்குத் திருமொழியில் அதனைக் காட்டுகின்ற சொல் எது? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அள்ளலம் பூங்கழனி’ என்று தொடங்கி.
  “கொலோ” என்றது, ஐயம்.

5. இவ்விடத்திற்குச் சேர, முதலிகள் நிர்வாஹத்தை அங்கீகரித்து
  அருளிச்செய்கிறார் ‘ஆனாலும்’ என்று தொடங்கி.