1
1“அற்ப
சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்” என்கிறபடியே, ‘பகவத்கோஷ்டிக்கு இனி ஆளாகமாட்டாரே!’
என்னும்படி ஐம்புல இன்பங்களிலே கைகழிந்த இவர், ‘சம்சாரிகளுக்கு இனி ஆளாகமாட்டார்’ என்னும்படி
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து, கொள்ள மாளா இன்பவெள்ளத்தைப் புஜிக்கக் கைகழிந்த படி
சொல்லுகிறது. நரகத்திற்குக் காரணமான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகக்கடவ இவர்,
சொரூபத்திற்குத் தகுதியான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகும்படி விழுந்தது. க்ஷுத்ரவிஷயத்தைப்
பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி
ஆனார். 2‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள்.
3“நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”
என்றாற்போலே. 4ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய - தான் பண்டு விரும்பியிருக்கும்
அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள். ‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’
என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது. பர்த்ருஸ்நேஹ பலாத்க்ருதா
- ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ. தன்வசத்தால் போனாள்
அல்லளாதலின் ‘பலாத்க்ருதா’ என்கிறது.
1. இத்திருவாய்மொழியில்,
தாயார் முதலான உறவினர்களையும், போக
உபகரணங்களையும் விட்டுச் சென்றதற்கு, சுவாபதேசப்பொருள்
அருளிச்செய்கிறார் ‘அற்ப சாரங்கள்’ என்று தொடங்கி.
2. பெண்பிள்ளை விட்டுப்
போனாளாகில் தாயார் செய்தது யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘என்னுடைமை’ என்று
தொடங்கி.
‘உடைமை’ என்றது, மகளை. ‘புக்கல்லது நில்லேன்’ என்றது, “செல்ல
வைத்தனளே” என்றதற்கு
அருளிச்செய்யும் இரண்டாவது பொருளைத்
திருவுள்ளம்பற்றி.
3. ‘பெருமாள்,
இளையபெருமாள் சென்ற வழியே செல்வேன் என்றாற்போலே’
என்று இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘நான் இப்பொழுதே’ என்று
தொடங்கி.
“ப்ரவேஸயத ஸம்பாராந்
மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி
லக்ஷ்மணேந கதாம் கதிம்”
என்பது, உத்தரராமாயணம்.
4. தாயார் முதலானவர்களை
விட்டுப் போனதற்குத் திருஷ்டாந்தமும்,
திருஷ்டாந்த சுலோகத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார்
‘ஸர்வாந்’
என்று தொடங்கி.
“ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய
பர்த்ருஸ்நேஹ பலாத்க்ருதா
அசிந்தயித்வா துக்காநி
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 16
: 19.
|