|
அ
அநுபவிக்கிறவன்” என்று
இருப்பார்க்கும் அவ்வருகு போகவேணுமோ? சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ? ‘உண்ணுஞ் சோறு’
என்பதுபோன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில், வேட்ட பொழுதின் அவையவை போலுமே, தோட்டார்
கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ; அப்படியே, இவைதாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும்
இருக்கும் ஒரோ நிலைகளிலே; அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொருபடியிருக்கும் அப்படியேயாயிற்று
இவர்க்கு எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க. 1தாரக போஷக
போக்கியங்கள் எல்லாம் “வாசுதேவஸ் ஸர்வம்” என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று
இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள். ‘உண்ணும்சோறு’ என்ற நிகழ்காலத்தாலே,
அல்லாதது2 உண்டு சமையும் சோறு என்கையும், இது மாறாதே உண்ணும்சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.
3“கணைநாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக
உண்” என்னக் கடவதன்றோ. மாறாதே உண்ணலாவதும், மாளாததும் இதுவே அன்றோ; “அப்பொழுதைக்
கப்பொழுது என் ஆராவமுதம்” என்றும், “கொள்ளமாளா இன்பவெள்ளம்” என்றும் அன்றோ
இருப்பது.
“அஹமந்நம்” என்கையாலே,
ஈசுவரனுக்கு நித்தியசூரிகளிடத்திலுள்ள
ஆதரம் சொல்லுகிறது. “அஹமந்நாத:” என்கையாலே, நித்தியசூரிகளுக்கு
ஈசுவரனிடத்திலுண்டான ஆதரம் சொல்லுகிறது.
1. “சோறு, நீர், வெற்றிலை”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘தாரகபோஷக’ என்று தொடங்கி. சோறு, தாரகம்; நீர்,
போஷகம்;
வெற்றிலை, போக்கியம் என்க. போக்கியம் - இனியபொருள்
“பஹூநாம் ஜந்மநாம அந்தே
ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ்ஸர்வம் இதி
ஸ மஹாத்மா ஸு துர்லப:”
என்பது ஸ்ரீகீதை, 7 : 19.
2. ‘உண்டு சமையும் சோறு’
என்றது, மாளுகையாலும் தெகுட்டுகையாலும்
உண்டு சமையும் என்றபடி. உண்டு சமையும் - உண்டு செலவழியும்.
‘மாறாதே உண்ணும்சோறு’ என்றது, மாளாமையாலும் தெகுட்டாமையாலும்
இது மாறாதே புஜிக்கும் சோறு என்றபடி.
3. பகவானுடைய
அநுபவம், மாறாதே புஜிக்கும் சோறாக இருக்கும்
என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘கணைநாணில்’
என்று தொடங்கி.
இது, பெரிய திருவந். 78. “ஓவாத ஊணாக உண்’ என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார்
‘மாறாதே’ என்று தொடங்கி. மாறாததுமாய்,
மாளாததுமாய், இருப்பதற்குப் பிரமாணங்கள் காட்டுகிறார்
‘அப்பொழுதைக்கு’ என்றும், ‘கொள்ள’ என்றும் தொடங்கி.
‘அப்பொழுதைக்கு’ என்பது, திருவாய்.
2. 5 : 4. ‘கொள்ளமாளா’ என்பது
திருவாய். 4. 7 : 2.
|