|
1இவற
1இவற்றில்
ஆகாதது ஒன்று இல்லை கண்டீர், இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’
என்கிறாள். 2இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.
என்று என்றே -
3இது ஒழிய வேறு ஒன்றனைத் ‘தாரகம்’ என்று இருக்கில் அன்றோ மற்று ஒன்றினைச்
சொல்லுவது; இது தன்னையே மாறாதே சொல்லி. என்றது, ஒருகால் இதனைச் சொல்லிப் பின்பு ஊண்
உறக்கத்தாலே போது போக்கலாம் விஷயம் அன்றே என்றபடி. கண்கள் நீர்மல்கி-4இவர்களுடைய
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் இருக்கிறபடி. 5இவள் முகத்தாலே
காணும் இவர்களுக்கு ஜீவனம். 6தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக்
கொண்டு போக வேணுமோ? ஒருவன் பகவத் குணங்களிலே ஈடுபட்டவனாய்க் கண்ணும் கண்ணநீருமாயிருக்க,
அவனைக் கண்டுகொண்டிருக்க
1. “எல்லாம் கண்ணன்” என்ற
பின்னர், “எம்பெருமான்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘இவற்றில் ஆகாதது’ என்று தொடங்கி.
என்றது,
பெண்களைப்போன்று அப்ராப்தமாய்க் கழியுண்கிற விஷயம் அன்று;
பிராப்தவிஷயம் இவன்
என்கைக்காக “எம்பெருமான்” என்கிறது என்றபடி.
2. “நண்கள் நீர்மல்கி”
என்றதனைக் கடாக்ஷித்து, “உண்ணும் சோறு” என்பது
போன்றவைகளைக் கூறுகின்றவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘இவள் சந்நிதியே’ என்று தொடங்கி.
3. அடுக்குத்தொடருக்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘இது ஒழிய’ என்று
தொடங்கி. ஏகாரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘இது தன்னையே’
என்று தொடங்கி. மாறாதே சொல்லுகைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
‘ஒருகால்’ என்று தொடங்கி.
4. மகளுடைய தேகயாத்திரை
சொன்னபின்பு, “கண்கள் நீர்மல்கி”
என்கையாலே, இவளுடைய கண்ணநீர் தாயாருக்குத் தேகயாத்திரை
என்று
கொண்டு அருளிச்செய்கிறார் ‘இவர்களுடைய’ என்று தொடங்கி. இவள்
மயர்வற மதிநலம்
அருளப்பெற்று உலகத்தையெல்லாம் திருத்துகையாலே
இவள் திருத்தின நாடெல்லாம் இவள் கண்ணும் கண்ணீருமாயிருக்கும்
இருப்பையே தங்களுக்குத் தாரக போஷக போக்கியங்களாக
நிளைத்திருப்பர்கள் என்னுமிடம் தோற்ற
‘இவர்களுடைய’ என்று
பன்மையில் வைத்து அருளிச்செய்கிறார்.
5. இவள் கண்ணும் கண்ணீருமாய்
இருக்கும் இருப்பே இவர்களுக்குத்
தாரகாதிகள் என்னுமதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார்
‘இவள்
முகத்தாலே’ என்று தொடங்கி.
6. இவள்
கண்ணும் கண்ணீருமாயிருக்கிற இருப்பை இழந்த கிலேசம் தோற்றச்
சொல்லுகிறவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘தன்
ஜீவனத்துக்கு’ என்று தொடங்கி. இதற்கு, சுவாபதேசப் பொருள்
அருளிச்செய்கிறார்
‘ஒருவன்’ என்று தொடங்கி.
|