|
New Page 1
மையில் தெரிவிக்கவேண்டும்”
என்கிற நிலையைக் குலைத்தான். புரோஹிதத்வமாகிற காரணம் கழிகையினாலே. ராஜ்யஞ்ச அஹஞ்சராமஸ்ய-சேஷவஸ்துக்களில்
ஒன்றனை ஒன்று ஆளுமோ? அங்ஙனேயாமன்று, இராச்சியந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி-உலகத்தில்
தமப்பன்மாரையும் தமையன்மாரையும் அழியச்செய்து தாம்தாம் இராச்சியத்தைக் கைக்கொண்டு
போருவது ஒன்று உண்டு; ‘அதனை இவனும் செய்வான்’ என்று இராதே கொள்; என் தன்மை அறிந்து அதற்குத்
தகுதியாக வார்த்தை சொல்லப் பாராய். கதம் தசர தாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக:-அவர்
பிரிந்த உடனே முடியவல்லவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே? அவர் பொகட்டுப்போன இராச்சியத்தை
நான் அபஹரித்தால். 2நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:-தகுதி இல்லாத வார்த்தைகளை அவன்
சொல்லச் செவிதாழ்த்ததனால் அபவாதத்துக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.
என்பாவை இனிப்போய்-3என்புத்திக்கு
வசமான செயல்களையுடையவள் கண்டீர் என்னை ஒழியப் புறப்பட்டுப்போனாள். அன்றிக்கே, நிருபாதிகமான
பெண்மையையுடையவள் என்னலுமாம். 3விளையாட்டுப் பொருள்களால் கொள்ளும் காரியமும்
அவனேயாம்படியான இந்த ஈடுபாட்டிற்கு மேலே அங்குப் போய்ப் பெறுவது என்னாகப் போனாளோ? என்பாள்
‘இனிப்போய்’ என்கிறாள். தண் பழனம் திருக்கோளூர்க்கே - சிரமத்தைப் போக்கக்
கூடிய நீர் நிலங்களையுடைய திருக்கோளூர்க்கே. கோவை வாய்
1. நீர் நம்மை வெறுக்கிறது
என்? உம்முடைய தாயார் ‘உமக்கு’ என்று
ராஜ்யத்தை வாங்கிப் பெருமாளைக் காட்டிலே போகும்படி செய்ய,
என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நமஸ்யாமி’ என்று தொடங்கி.
“யத்ஹிமாத்ராக்ருதம்
பாவம் நஅஹம் ததபி ரோசயே
இஹஸ்தோ வனதுர்க்கஸ்தம்
நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 :
15.
அபவாதத்துக்குப் பிராயச்சித்தமாவது,
‘தன்னிடத்தில் பாவம்
இல்லாவிட்டாலும் உலகத்தில் அபவாதம் உண்டானால் பிராயச்சித்தம்
செய்யவேண்டும்’
என்று சாஸ்திரம் சொல்லுகையாலே பிராயச்சித்தம்
செய்வது.
2. “பாவை” என்று மரப்பாவையாய்,
அதுபோன்று பரதந்திரப் பட்டவள்
என்ற கருத்திலே அருளிச்செய்கிறார் ‘என்புத்திக்கு’ என்று தொடங்கி.
3. “பூவை.
. .என்பாவை” என்றதற்கு, அருளிச்செய்த முதற்பொருளினைக்
கடாக்ஷித்து “இனி” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார்
‘விளையாட்டுப்பொருள்களால்’ என்று தொடங்கி.
|