பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
301

New Page 1

துடிப்ப - கோவைப்பழம் போன்ற சிவப்பையுடைத்தான அதரமானது துடிக்க.  2“ ‘பிரியேன்’ என்று பிரிந்தாய்; ‘வருகிறேன்’ என்று வந்திலை; என்னைத் தனியே இட்டுவைத்தாய்;, நான் வருமளவும் இருந்தாய்” என்பனபோலே இருக்கச் சில சொல்ல நினைக்குமே; அது தோற்றும்படி உதடு நெளிக்கிறபடி. கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு-2நினைத்தது சொல்லித் தலைக்கட்ட வொட்டாநின்றதோ கண்ணநீர்! உடைகுலைப்பட்டுக் கண்ணநீராலே தலைக்கட்டாநின்றாள். 3“தசரதபுத்திரனான ஸ்ரீபரதாழ்வான் தீன சுரத்தோடு ஒரு தடவை ‘ஆர்யா’ என்று சொல்லிப் பின்பு வேறு ஒருவார்த்தையும் சொல்லவில்லை” என்பது போன்று.

    என் செய்யும் கொலோ - சொல்லமாட்டாள், தவிரமாட்டாள்; அழாதொழியமாட்டாள்; எங்ஙனே படுகிறாளோ? நம்மையும் பிறரையும் விட்டு அவன் திருநாமங்களை அநுபவிக்கிற போதை அழகு காணப்பெற்றோம்; அவனையே கண்டு அநுபவிக்கிற போதை அழகு காணப்பெற்றிலோமே. 4நினைக்கும் வேளையில் போலே அன்று, கண்டால் பிறக்கும் விகாரங்கள்; 5“காமன் உடல்கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீண்முடியான்தன் பெயரே கேட்டிருந்து அங்கு ஆரலங்கல் ஆனமையால் கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்” என்றேயன்றோ இருப்பது. 6அலாபத்தோடே இருக்கும்

 

1. துடிப்பதற்குரிய காரணங்களை அருளிச்செய்கிறார் ‘பிரியேன்’ என்று
  தொடங்கி.

2. ஆனால், அதனைச் சொல்லாமல் உதடு நெளிக்கிறது ஏன்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘நினைத்தது சொல்லி’ என்று தொடங்கி. ‘உடை
  குலைப்பட்டு’ என்றது, அவன் எதிரே வந்ததற்கு ஈடுபட்டு என்றபடி.

3. சொல்ல ஒட்டாமைக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘தசரத புத்திரனான’
  என்று தொடங்கி.

  “துக்காபிதப்தோ பரதோ ராஜபுத்ரோ மஹாபல:
   உக்த்வா ஆர்யேதி ஸக்ருத்தீனம் புந: நோவாச கிஞ்சந”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 38.

4. அநுசந்தான நிலையைக் காட்டிலும் அநுபவ வேளைக்கு ஏற்றம் யாது?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நினைக்கும் வேளையில்’
  என்று தொடங்கி.

5. இதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘காமன் உடல்கொண்ட’ என்று தொடங்கி.
  இது, நான்முகன் திருவந். 78.

6. ‘நம்மையும் பிறரையும்’ என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘அலாபத்தோடே’ என்று தொடங்கி.