|
என
என்பர் கொலோ குணம்
மிக்கனள் என்பர் கொலோ - 1இவள் விதியை மீறினாள் என்பர்களோ; அல்லது
2சித்தாந்தம் தன்னையே சொல்லுவர்களோ? 3ஓர் அளவிலே நின்று விலக்கியவற்றைக்
கொண்டு, இது தகுதி இல்லாதது என்பர்களோ; 4ருசி சுபாவத்தாலும் விஷய சுபாவத்தாலும்
இது தக்கது என்பர்களோ? 5சாதன விதியளவிலே நின்று தடுமாறுவர்களோ: ஆதம் சொரூபத்தைப்
பார்த்துத் தெளிவர்களோ? 6உபாய அம்சத்தைப் பற்றி நின்று, இது கடவது அன்று என்பர்களோ;
ஆத்மாவின் சொரூபத்தையும் பேற்றின் சொரூபத்தையும் பார்த்து, இது கடவது
1. “கொல்லை என்பர்கொலோ,
குணம் மிக்கனள் என்பர்கொலோ”
என்பதற்குச் சுவாபதேசப் பொருள் அருளிச்செய்கிறார் ‘இவள்
விதியை’
என்று தொடங்கி. ‘இவள் விதியை மீறினாள்’ என்றது, அவனையே
உபாயமாகக் கொண்டிருத்தற்கு
மாறுபட்ட தன் முயற்சியால் உண்டாகின்ற
வேறு உபாயங்களை விடும்படி விதிக்கின்ற “பரித்யஜ்ய -
அடியோடு விடு”
என்கிற விதியை மீறினாள் என்றபடி.
2. ‘சித்தாந்தம் தன்னையே
சொல்லுவர்களோ?’ என்றது, ‘ருசி சுபாவத்தாலும்,
விஷய சுபாவத்தாலும், ஆத்ம சொரூபத்தைப் பார்த்தாலும்’
என்று
சொல்லப்படுகின்ற இவளுடைய பிராவண்யத்தின் மிருதி, விஷய
வைலக்ஷண்யம், சேஷத்வ சொரூபம்
ஆகிற காரணம் மூன்றாலும் இது
தக்கது என்கிற சித்தாந்தந்தன்னையே என்றபடி.
3. அவன் இருந்த தேசத்து
ஏறப்போதலாகிற இது, விதியை மீறுதலும்,
சித்தாந்தத்தைச் சொல்லுதலும் ஆகிறபடி யாங்ஙனம்? என்ன,
அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘ஓர் அளவிலே’ என்று தொடங்கி. ‘ஓர்
அளவிலே’ என்றது,
அவனையே உபாயமாகக் கொள்ளுதலும், அவனாலே
ரக்ஷிக்கப்படும் பொருள் என்று எண்ணுதலும் போன்றவைகளிலே
என்றபடி.
‘விலக்கியவற்றைக் கொண்டு’ என்றது, தன் முயற்சி, ஆத்ம சொரூபத்திற்கு
முரண்பட்டது
என்று விலக்குகிற “அதபாதகபீதஸ்வம்” (இந்தச்
சுலோகத்தை 5-ஆம் பத். 221-ஆம் பக்கத்திற்
காணல்தகும்) என்பது
போன்ற பிரமாணங்களைக் கொண்டு என்றபடி.
‘ருசி சுபாவத்தாலும்’
என்றது, விஷயத்தில் உண்டான ஆசையின்
மிகுதியைக் குறித்தபடி.
5. ‘ஓர் அளவிலே’ என்று தொடங்கி
மேலே அருளிச்செய்த வாக்கியங்களை
விவரணம் செய்கிறார் ‘சாதனவிதி அளவிலே’ என்று தொடங்கி.
என்றது,
சாதனவிதி அளவிலே நின்று விலக்கியவற்றைக் கொண்டு என்றபடி. ‘ஆத்ம
சொரூபத்தைப்
பார்த்து’ என்றது, சேஷத்வம், சேஷியாகிய இறைவனுக்கு
அதிசயத்தைக் கொடுக்கக் கூடியதாகையாலே
அதனைப் பார்த்து என்றபடி.
6. ‘சாதனவிதி’
என்று தொடங்கி மேலே அருளிச்செய்த இரண்டு
வாக்கியங்களையும் விவரணம் செய்கிறார் ‘உபாய அம்சத்தை’
என்று
தொடங்கி. ‘ஆத்மாவின் சொரூபத்தையும்’ என்றது, இறைவனிடத்தில்
கொள்ளவேண்டிய பிராவண்யமே
வடிவான ஆத்மசொரூபத்தையும்
என்றபடி.
|