|
என
என்பர்களோ? 1பிற
சாதனங்களை விலக்குதலை முன்னாகக்கொண்ட சொரூப ஞானம் பிறந்தால் பறப்படத் தகுதி இல்லை;
சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தினை நினைத்தால், போய்ப் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது.
2விதியைப் பார்த்து நிந்திப்பர்களோ: 3காமவசனத்தைப் பார்த்து
நன்று என்பர்களோ? 4“விரக்தரான நீர் காமத்துக்குப் பரவசப்பட்டிருக்கின்ற எங்களை
என்படுத்துகிறீர்” என்றாள் அன்றோ தாரை இளையபெருமாளைப் பார்த்து.
சில்லை வாய்ப் பெண்டுகள்-5சிலுகு
சிலுகு என்னும் பெண்டுகள். விஷயத்திற்கு உட்பட்டு வருமதனையும் வசன சித்தம் என்றிருக்குமவர்கள்.
6உபாயபுத்தியினாலே வருமவற்றில் அன்றோ விதிக்கு
1. ஆக, மேலே கூறிப் போந்தவற்றால்
பலித்த பொருளை அருளிச்செய்கிறார்,
பிறசாதனங்களை’ என்று தொடங்கி.
2. மீண்டும் அந்யாபதேசத்தாலே,
அருளிச் செய்கிறார் ‘விதியைப் பார்த்து’
என்று தொடங்கி. இங்கு, கீழ்வருவனவற்றை உணர்தல்
தரும்.
எத்திணை மருங்கினும்
மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மை
யான.
(தொல். பொருள். 35.)
கடலன்ன காம முழந்தும்
மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்
(குறள். 1137.)
3. ‘காமவசனம்’ என்றது,
“காந்தார்த்திநீ து யாயாதி ஸங்கேதம் ஸாபி
ஸாரிகா” என்ற வாக்கியத்தை. காமவசனம் - காமசாத்திரம்.
4. காமசாஸ்திரத்தைப்
பார்த்தால் நன்று என்று தோற்றுமோ? என்ன,
‘விரக்தரான நீர்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
“ந காம தந்த்ரே தவ
புத்திரஸ்தி
த்வம் வை யதா மந்யுவசம்
பரபந்ந:
ந தேசகாலௌ ஹி நசார்த்த
தர்மௌ
அபேக்ஷதே காமரதிர் மநுஷ்ய:”
என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 55.
இளையபெருமாளைப் பார்த்துத் தாரை
கூறியது. என்றது, நீர் காமசாஸ்திரத்தை அறிந்திருந்தால் அன்றோ
நான்
செய்தது நன்று என்று நினைப்பீர் என்றபடி.
5. சிலுகு சிலுகு என்னும் பெண்டுகள்-பலவாறாகத்
தூற்றிப் பேசும் பெண்கள்.
அவர்கள் யார்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘விஷயத்திற்கு’
என்று தொடங்கி. என்றது, விரும்பத்தக்கனவாய் வருமவற்றையும்
“த்யாயீத-தியானிக்கக்கடவன்”,
“உபாஸீத-உபாசிக்கக் கடவன்” என்பன
போன்ற வசனங்களால் சித்திக்கின்ற உபாயத்திலே சேரும்
என்று
இருப்பவர்கள் என்றபடி.
6. அப்படி
நினைத்திருக்க ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘உபாயபத்தியினாலே’ என்று
தொடங்கி.
|