பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
305

விஷயமுள்ளது; குணங்களால் தூண்டப்பட்டுப் போமிடத்தில் விதி விஷயமாகாதே. அயல் சேரியுள்ளாரும் - இவள் இருந்த ஓர் ஊர் வாசியும் கூட இல்லாதவர்கள். எல்லே - 1கீழில் அவர்களை விளிக்கிறாளாதல்; இஃது ஓர் ஆச்சரியம் இருந்தபடி என்! என்கிறாளாதல். செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே - 2அவன் வரவை வாராமைக்குச் சமம் ஆக்கினாள். முற்பாடனாய் வந்தவனை, தான் நாலடி இட்டுப் பிற்பாடனாம்படி செய்தாள். அவன் சொரூபத்தை அழித்தாள். பரத்துவம் வியூகம் முதலியவைகளை விட்டு இங்கு வந்து கிடக்கிறது இவளுக்கு முற்பாடனாய் உதவுகைக்கு அன்றோ. 3தனக்குமேல் ஒன்று இல்லாததான செல்வமானது கரைபுரளும் படியாக அவன் வந்து திருக்கண்வளர்ந்தருளுகிற திருக்கோளூர்க்கே. 4பாதுகாக்க வேண்டிய பொருள்களினுடைய பாதுகாத்தலைத் தொடங்கினாலன்றோ நியமிக்கின்றவனுடைய செல்வம் பிரகாசிப்பது! 5அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே, இவள் வரவு பார்த்து அவன் காலம் பார்த்துக்கொண்டு கிடக்கிறான் ஆதலின் ‘அவன் கிடந்த’ என்கிறாள்.

    மெல் இடைநுடங்க - 6அவன் சொரூபஞானம் இல்லாவிட்டால், தன்னுடைய சொரூபஞானமோதான் இவளுக்கு உண்டா

 

1. ‘கீழில் அவர்களை’ என்றது, மேற்பாசுரத்திற் கூறிய பூவை
  முதலானவற்றையாதல்; தோழியையாதல்; சில்லைவாய்ப் பெண்டுகள்
  முதலானாரையாதல். “சில்லைவாய்ப்பெண்டுகள் அயற்சேரியில் உள்ளார்”
  என்றதற்கு, அத்யவஸாய நிஷ்டர் என்பதும், இவர்களுக்கு அயலாரான
  த்வராநிஷ்டர் என்பதும் சுவாபதேசப் பொருள்.

2. திருக்கோளூர்க்கே செல்ல மேவினள்” என்கிற திருத்தாயாருடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘அவன் வரவை’ என்று தொடங்கி.
  அதனை விவரணம் செய்கிறார் ‘முற்பாடனாய்’ என்று தொடங்கி. இதனால்
  பலித்த பொருளினை அருளிச்செய்கிறார் ‘அவன் சொரூபத்தை’ என்று
  தொடங்கி. அவன்தான் இவளுக்கு முற்பாடனாகைக்கோ வந்தது என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பரத்துவம்’ என்று தொடங்கி.

3. “செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே” என்பதற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘தனக்குமேல்’ என்று தொடங்கி.

4. பரமபதத்திலும் செல்வம் உண்டாயிருக்க, இங்கே கரைபுரளுகையாவது
  எப்படி? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பாதுகாக்க வேண்டிய’
  என்று தொடங்கி.

5. “அவன் கிடந்த” என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
  ‘அவ்வளவு’ என்று தொடங்கி.

6. “மெல்லிடை நுடங்க” என்கிறவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘அவன் ணொரூபஞானம்’ என்று தொடங்கி. இது,
  சுவாபதேகப் பொருள். அவன் சொரூப ஞானமாவது, அவனுடைய