பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
306

யிருக்கிறது. இவளுக்கு விழுக்காடு அறியாமை 1எங்கும் ஒத்தது கண்டீர்! தன் இடையை அறிந்தாளாகில் தான் புறப்பட்டுப்போமோ? நடுவே அறியாமல் புகுந்த பிழை அன்றோ. மிருதுவான இடையானது துவுளம்படியாக. 2இந்த இடையைக்கொண்டு இவள் நடக்கப் புக்கால் எதிரே புறப்பட்டு வர வேண்டாவோ? இளமான் - போகிற வழியில் மிறுக்கும், தன் தன்மையும் அறிந்து மீளவல்ல பருவம் அன்று கண்டீர். செல்ல மேவினளே-போக ஒருப்பட்டாள். 3இவள் கையிலும் இவர்கள் கைகளிலும் அன்றே பேறு கிடப்பது; அது அவன் கையதன்றோ; 4இத் தலையில் துணிவே யன்றோ உள்ளது. 5மேலே “போனாள்” என்றாள்; இங்கே, “போக்கிலே ஒருப்பட்டாள்” என்னாநின்றாள்; இது, சேரும்படி என்? என்னில், இவள் போகையில் ஒருப்பட்டபோதே போய்ப்புக்காள் அன்றோ என்கிறாள்.

    இளமான் செல்ல மேவினள், கொல்லை என்பர்கொலோ? குணம் மிக்கனள் என்பர்கொலோ? - 6அவள் கைகழிந்து கொடு

 

  நிருபாதிக ரக்ஷகத்வ ஞானம். தன்னுடைய சொரூபஞானமாவது, தன்
  முயற்சியைப் பொறாத பாரதந்திரிய ஞானம்.

1. ‘எங்கும் ஒத்தது’ என்றது, அவன் சொரூபத்திற்போலே தன் சொரூபத்திலும்
  ஒத்தது என்றபடி. அது எப்படி? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘தன்னிடையை’ என்று தொடங்கி. ‘நடுவே’ என்பது, சிலேடை.

2. “மெல்லிடை நுடங்க, செல்ல மேவினள், அவன் கிடந்த” என்கிறவளுடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘இந்த இடையை’ என்று தொடங்கி.
  ‘புறப்பட்டு வரவேண்டாவோ’ என்றது, செல்வக் கிடப்பாலே கிடந்தான்
  என்பதனைத் தெரிவித்தபடி.

3. போனாள் என்னாமல், “செல்லமேவினள்” என்பான் என்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இவள் கையிலும்’ என்று தொடங்கி. என்றது,
  சேதனனாகையாலே இவனிடத்தில் முயற்சி மாத்திரமே வேண்டுவது;
  பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு ஆகையாலே, இவனுக்கும் பிறர்க்கும்
  சம்பந்தம் இல்லை என்றபடி.

4. ஆனால், இவனுக்குச் செய்யத்தக்கது எது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இத்தலையில்’ என்று தொடங்கி.

5. ‘மேலே போனாள்’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து, பாதிவழி
  போனாள் என்பது. அது எங்ஙனே? என்னில், இத்திருவாய்மொழியின்
  முன்னுரையிலே ‘படுக்கையைப் பார்த்தவிடத்தில் வெறும்படுக்கையாய்க்
  கிடந்தது’ என்கையாலும், “பொன்னுலகாளீரோ’ என்ற திருவாய்மொழியின்
  முன்னுரையிலே. ‘புறச்சோலையிலே கிடந்து தூது விடுகிறாள்’
  என்கையாலும், ‘ஒருப்பட்டாள்’ என்பதற்கு, பாதிவழி போனாள் என்பது
  பொருளாகக் கொள்க.

6. மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘அவள் கைகழிந்து’ என்று தொடங்கி.