|
ஈ
ஈடு :-
ஏழாம்பாட்டு. 1இவளுடைய உடலின் மிருதுத்
தன்மையினையும் பிரிவினால் வந்த மெலிவினையும் நினைத்து, இவை எல்லாம் அவ்வளவும் செல்லப்
போகவல்லள் ஆனால் அன்றோ என்கிறாள். என்றது, நாம் இலையகலப்படுகிறோமத்தனை ஒழிய, இவள்போய்
முடியப்புகாநின்றாளோ? என்றபடி.
மல்கு நீர்க் கண்ணொடு
மையல் உற்ற மனத்தினளாய் - 2“என்றேனும் கட்கண்ணாற் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும்” என்னும் இரண்டும் ஒழிய, இவள் எங்ஙனே போனபடி? 3கண், மல்குநீர்க்
கண்ணாயிற்று; மனம், மையல் உற்ற மனமாயிற்று. அகவாயும் இருண்டு, புறவாயும் இருண்டு இருக்க, இவள்
எங்ஙனே போனபடி? 4கண்ண நீராலே கண்தோற்றாது, அன்பினாலே மூடப்பட்ட தாகையாலே
நெஞ்சு இருண்டு தோற்றாது. இரண்டற்கும் இரண்டும் நிரூபக மாயிருத்தலின் ‘மல்கு நீர்க்கண் மையல்
உற்ற மனம்’ என்கிறாள். மையல் உற்ற மனத்தினளாய் நெடுமால் என்று அழைத்து-5தெஞ்சு
ஒழியவே தான் கூப்பிட்டது. நல் அல்லும் நல்பகலும் - 6பகவத் விஷயத்திலே மூழ்கிக்
கூப்பிடுகிற கால மாகையாலே, ‘நல்
1. “ஒல்கி ஒல்கி நடந்து
ஒசிந்து” என்கையாலே, இவளுடைய உடலின்
மிருதுத் தன்மையும், “மல்கு நீர்க்கண்ணோடு மையல் உற்ற
மனத்தினளாய்”
என்கையாலே, பிரிவில் வந்த மென்மையும் தோன்றும். ‘இவையெல்லாம்’
என்றது, மேல்
திருப்பாசுரத்தில் கூறிய அநுபவம் முதலானவைகளை.
“எங்ஙனே புகுங்கொல்” என்றதனைத் திருவுள்ளம்
பற்றி ‘அவ்வளவும்
செல்ல’ என்கிறார். மேலே கூறியதனை விவரணம் செய்கிறார் ‘தாம்
இலையகல’
என்று தொடங்கி.
2. “மல்கு நீர்க் கண்”
என்றும், “மையல் உற்ற மனம்” என்றும்
விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘என்றேனும்’
என்று தொடங்கி.
இது, பெரிய திருவந். 23. என்றது, ஒருவர் செல்லும்போது
புறக்கண்களாலேயாதல்,
அகக்கண்ணாலேயாதல் பார்த்துக்கொண்டு செல்ல
வேண்டும்; இவை இரண்டும், போக ஒண்ணாதபடி இவளுக்குப்
பரவசமான
பின்பு, இவள் எங்ஙனே போகப் புகுகிறாள்? என்றபடி.
3. இரண்டும் போக ஒண்ணாமைக்கு
இலக்கு ஏது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கண் மல்குநீர்’ என்று தொடங்கி. அதனை
விவரணம்
செய்கிறார் ‘அகவாயும்’ என்று தொடங்கி.
4. இரண்டும் இருண்டிருப்பதற்குக்
காரணம் யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கண்ணநீராலே’ என்று தொடங்கி.
5. மனம் மயக்கத்தை அடைந்திருக்க,
அழைக்கக்கூடுமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘நெஞ்சு’ என்று தொடங்கி. இங்கே,
“முடியானே”
என்ற திருவாய்மொழி அநுசந்தேயம்.
6.
பிரிவினாலே கலங்கிக் கூப்பிடுகிற பகல் இரவுகளுக்கு நன்மை எது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பகவத்விஷயத்திலே’ என்று தொடங்கி.
|