பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
319

அல

அல்லும் நல்பகலும்’ என்கிறாள். 1நாட்டார் க்ஷுத்ர விஷயங்களை ஆசைப்பட்டுக் கூப்பிடாநிற்க, ‘எல்லாம் கண்ணன்’ என்று கூப்பிடுகிற நாள் அன்றோ. நெடுமால் என்று அழைத்து - அவன் தன் பக்கல் பிச்சு எறியிருக்கும்படியைச் சொல்லிக் கூப்பிட்டு, இனிப்போய் - அவன் தன் பக்கல் செய்யும் வியாமோகத்தைச் சொல்லிக் கூப்பிடும் இதற்கு மேலே தன் வியாமோகம் காட்டப் போனாளே. 2அன்றிக்கே, கண்ணும் தோற்றாமல் நெஞ்சும் பறியுண்டிருக்கும் இதற்கு மேலே, இனிப் போய், வேறே ஒன்று உண்டோ அநுபவிப்பது? என்னுதல்.

    செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே - 3எதிரே பாதி வழி வந்து முகத்திலே விழித்து உடம்பிலே அணைத்துக்கொண்டு போகாதே ஒழிந்தது செல்வச்செருக்கே அன்றோ; 4செல்வத்தால் வந்த செருக்கு அன்றாகில் இவ்வரவு அவன் அன்றோ வருவான்? 5வழியே பிடித்து வாழ்ந்துகொண்டு போகலாயிருக்க, செருக்காலே இழந்தான் என்கிறாள். 6அன்றிக்கே, “சுகமாகத் தூங்கின ஸ்ரீமானாகிய அந்தப் பெருமாள் என்னால் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே, அழகு மிக்குக் கிடந்த என்னுதல். 7“சுகமாகத்

 

1. ‘அப்படி நல்ல நாளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘நாட்டார்’ என்று தொடங்கி.

2. “மல்கு நீர்க் கண்ணோடு” என்றதனையும் கூட்டி, “இனி” என்றதற்கு,
  வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.

3. “அவன் செல்வம் மல்கிக் கிடந்த” என்பதனை, வெறுப்பாகக் கூறும்
  கூற்றாகக் கொண்டு, கருத்து அருளிச்செய்கிறார் ‘எதிரே பாதிவழி’ என்று
  தொடங்கி.

4. ‘செருக்கு’ என்பதற்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘செல்வத்தால்’ என்று தொடங்கி.

5. ‘எதிரே பாதி வழி வந்து’ என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘வழியே பிடித்து’ என்று தொடங்கி.

6. “செல்வம்” என்பதற்கு, அழகு என்று வேறும் ஒருபொருள்
  அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.

  “ஸமயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 3 : 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.


7. “செல்வம்” என்றதற்கு அருளிச்செய்த இரண்டாவது பொருளுக்குச் சேர,
  பாவம் அருளிச்செய்கிறார் ‘சுகமாகத் தூங்கினவன்’ என்று தொடங்கி.