பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
321

New Page 1

வைத்துக்கொண்டு வருந்தி வருந்தி அன்பினால் நிறைந்த மனத்தினையுடையவளாகிக் கண்களிலே நீர் அலையும்படி சென்று சேர வல்லளோ? என்க.

    வி-கு :- காரிகை கையை வைத்து நொந்து செல்லுங்கொல் என்க. காரிகை - பெண். எம்மை : தனித்தன்மைப்பன்மை. செவிலி முதலியோரையும் உளப்படுத்துமிடத்து உளப்பாட்டுத் தன்மைப் பள்மையாம்.

    ஈடு :- எட்டாம்பாட்டு. 1திருக்கோளூரில் அன்பினாலே, என்னைப் பொகட்டுப் போன என் பெண்பிள்ளை, அந்த அன்பே துணையாகப் போய்ப் புகவல்லளேயோ? என்கிறாள்.

    ஒசிந்த நுண் இடை - 2இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரியவேண்டும்படி காண் இடை இருப்பது! நுண்ணிடைமேல் கையை வைத்து - 3நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன்கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடைதான்; “மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடயாள்” என்று, அவன் கூடப் போகச்செய்தேயும் அஞ்சவேண்டும் படியான இடை அன்றோ. ஒசிதல் - துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை. 4பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது, இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்படவேண்டும்படியாய் இருக்கை. ஒசிந்த நுண்

 

1. திருப்பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “ஒசிந்த நுண்ணிடை” என்கிறவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘இவள் நடவாதே’ என்று தொடங்கி.

3. “நுண் இடை” என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘நடு
  ஒன்று’ என்று தொடங்கி. இதனால் பலித்த பொருளினை
  அருளிச்செய்கிறார் ‘தன்கையை’ என்று தொடங்கி. அதற்குக் காரணத்தை
  அருளிச்செய்கிறார் ‘மின்னையும்’ என்று தொடங்கி. இது, பெரிய
  திருமொழி, 3. 7 : 7.

4. “மின்னையும் வஞ்சியையும் வென்று” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘பல சொல்லி என்’ என்று தொடங்கி. ஆனால், இடை இல்லையோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அதாவது’ என்று தொடங்கி.

  நுண்டுகில் அகலல்குல் நொசித்த வெம்முலை
  உண்டிவண் நுசுப்பென உரைப்பி னல்லது
  கண்டறி கிலாவிடைக் காம வல்லியாழ்
  கொண்டவர் குழாத்திடைக் கொடியின் ஒல்கினாள்.

 
என்பது, சீவகசிந். 654.