|
இ
இடைமேல் கையை வைத்து -
1இப்படி விழுக்காடு அறியாதார் உளரோ! நாயகன் கை வைக்கப் பொறுக்குமத்தனை
போக்கித் தன் கை வைக்கப் பொறுக்குமோ? தொடுங்கால் ஒசியும் இடை அன்றோ - 2அடியே
பிடித்துக் கரோபத்ரவம் கனத்தே அன்றோ இருப்பது. ‘கையை வைத்து’ என்கிறாள், 3மலையை
வைத்து என்னுமாறு போலே. நொந்து நொந்து - 4கை வாங்கமாட்டாள்; நோவாதிருக்கமாட்டாள்;
5சஹஜமான பகைவர்களோடே கூடி ஜீவித்துக் கிடக்கலாம்; வந்தேறிகள் கீழே பிழைக்க
ஒண்ணாதே அன்றோ. நொந்து நொந்து - மிகவும் நொந்து. முதலிலே இல்லாமையிலே நிலையான இடையிலே
தனபாரம்கொண்டு ஆற்ற ஒண்ணாதிருக்க, வந்தேறியான கைகொண்டு பொறுக்க ஒண்ணுமோ? கசிந்த நெஞ்சினளாய்
- இடையினுடைய நொய்மை சொல்ல, நெஞ்சோதான் சாலப் பருத்திருக்கிறது? 6நெஞ்சில்
ஈரம் இருக்கிறபடி.
1. “கையை வைத்து” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இப்படி’ என்று
தொடங்கி. அப்படித் தன் கையைப் பொறாது
இருக்குமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘தொடுங்கால்’ என்று தொடங்கி. இது,
திருவிருத்தம்.
பா. 37.
2. ‘அடியே பிடித்து’ என்று
தொடங்கும் வாக்கியம் சிலேடை. ‘அடியே
பிடித்து’ என்றது, “பொய்ந்நின்ற ஞானம்” என்ற திருப்பாசுரம்
தொடங்கி
என்றபடி.
3. “வைத்து” என்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘மலையை’ என்று
தொடங்கி.
4. “நொந்து நொந்து” என்ற
அடுக்குத் தொடருக்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘கைவாங்க’ என்று தொடங்கி.
5. மாட்டாமைக்குக் காரணத்தை
அருளிச்செய்கிறாந் ‘சஹஜமான’ என்று
தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘முதலிலே இல்லாமையிலே’
என்று தொடங்கி.
நாமே இடையுள்ள வாறறி
வாம் இனி நாங்கள் சொல்ல
லாமே மருதன் மருத வனத்தன்ன
மன்னவரைப்
பூமே லணிந்து பிழைக்கச்செய்
தார் ஒரு பொட்டு மிட்டார்
தாமே தளர்பவ ரைப் பாரம்
ஏற்றுதல் தக்கதன்றே.
என்பது, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.
(பட்டினத்தார்)
6. “கசிந்த”
என்றதன்பொருள், ‘நெஞ்சில் ஈரம் இருக்கிறபடி’ என்பது.
|