|
னுக
னுக்கு என்னப்புக்கு அந்த
நிலையிலே நெஞ்சம் நெகிழ்ந்து, பின்பு அது தானும் மாட்டாதே இருக்கும். 1“பழத்தையாவது
மலரையாவது மிகுதியாக மனத்தினைக் கவரக்கூடியதான வேறு பொருள்களையாவது பார்த்துப் பலதடவை ஓ
பிரியையான சீதையே! என்று இவ்விதமாகப் பெருமூச்சு விட்டுக்கொண்டு உம்மைப் பற்றியே
பேசுகிறார்” என்கிறபடியே, அவன் சொல்லுமவையெல்லாம் இவள் சொல்லுகிறபடி. 2நல்லது
கண்டால், அவனுக்கு என்று இருக்குமதற்கு மேலே அவ்வருகே ஒன்று தேடிப் போனாளோ! 3இவளுக்காகத்
திருக்கோளூரிலே வந்து, தன்னை இவளுக்கு ஓக்கி வைத்தபடி. 4இது எல்லாம் கிடக்க -
“எல்லாப் போகங்களையும் விட்டு” என்னுமாறு போலே. அன்றிக்கே, உண்ணும்சோறு பருகுநீர் தின்னும்
வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்றலும், ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும்
தார்களுமே பிதற்றக் கற்புவான் இடறுதலும், பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும்
திருமால் திருநாமங்களே கூவி எழுதலும், காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
1. “த்ருஷ்ட்வா பலம் வா
புஷ்பம் வா யத்வா அந்யத் ஸுமனோஹரம்
பஹு ஸ: ஹாப்ரியேதி
ஏவம் ஸ்வஸந் த்வாம் அபீபாஷதே”
என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 45.
இது, பிராட்டியைப் பார்த்துத் திருவடி
கூறியது. ‘அவன் சொல்லுமவையெல்லாம்’ என்றது, அவன், தன்னைப்
பிரிந்து சொல்லுமவை எல்லாம் என்றபடி.
2. “இனி” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘நல்லது கண்டால்’ என்று
தொடங்கி.
3. “என் கண்ணன்” என்கைக்கு,
அவன் செய்த உபகாரம் யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவளுக்காக’ என்று தொடங்கி.
4. “இது எல்லாம்
கிடக்க” என்பதற்கு, இரண்டுவகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார். முதற்பொருள், ‘எல்லாப்
போகங்களையும்’ என்று
தொடங்கி அருளிச்செய்வது. “ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய” என்பது
ஸ்ரீராமா.
சுந். 16, 19. என்றது, லீலோபகரணங்கள், போகோபகரணங்கள்
முதலான பொருள்கள் எல்லாம் கிடக்க
என்றபடி. இரண்டாவது பொருள்,
மேல் திருப்பாசுரங்களில் கூறிய பகவத் பிராவண்யம் எல்லாம் கிடக்க
என்பது. இதனை அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
|