|
ஈர
ஈரியாயிருத்தலும் இவை
எல்லாம் கிடக்க என்னுதல். இது எல்லாம் கிடக்க - 1இந்த எல்லை இல்லாத செல்வங்கள்
கிடக்க.
இனிமேல் -
2‘தனக்கு’ என்கிற எண்ணத்தின் அளவிலே உண்டறுக்க மாட்டாதவனுக்கு ஒன்று கொடுத்துக்
குறைதீரப் போனாளே. 3“தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச்
சொல்லுகிறோம்” என்றே அன்றோ அவன் இருப்பது. 4அவன் படியை நினைத்தால் இவளுக்கு
இங்கே இருக்க அமையாதோ? சேரி பல்பழி தூஉய் இரைப்ப - 5பொகடும் வழித்துணை பெற்றவாறே
போனாளத்தனை. 6ஒருவர் இருவர் அன்றே! இனி ஓருவர் சொல்லிற்று ஒருவர்
சொல்லார்கள் அன்றோ. பல் பழி தூஉய் இரைப்ப - தன்னை அவனுக்கு ஆக்கிவைத்தாள்: பின்னை அதுதானும்
மாட்டிற்றிலள்; புறப்பட்டுப்போனாள்; தாயைப் பார்த்திலள்; ஊரார் பழி பார்த்திலள்; இத்தனையும்
செய்தால் அவன்தான் எதிரே வரப்பெற்றது இல்லை என்று இப்புடைகளிலே ஒரு கோடியன்றோ
சொல்லுவன. 7“அலர் எழில் ஆருயிர் நிற்கும்” என்கிற
1. “கிடக்க” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இந்த எல்லை’ என்று
தொடங்கி.
2. “நல்லது கண்டால் அவனுக்கு
என்று இருக்கும்” இவ்வளவே
போதியதாமோ? அவற்றைக் கொடுக்கவேண்டாவோ? என்ன, அதற்கு
விடை
அருளிச்செய்கிறார் ‘தனக்கு’ என்று தொடங்கி. ‘உண்டறுக்க
மாட்டாதவனுக்கு’ என்றது, நிறைவுபெற்றவனாய்,
‘இவனுக்கு ஒன்றும்
செய்யப்பெற்றிலோம்’ என்று இழவுபட்டிருக்குமவனுக்கு என்றபடி.
3. இப்படி அவன் இருக்கும்
என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
“தேபூயிஷ்டாம்” என்று. இது, யஜு ர்வேதம்.
4. இதனால் பலித்த
பொருளினை அருளிச்செய்கிறார் ‘அவன் படியை’
என்று தொடங்கி.
5. “நடந்தாள்” என்றதனையும்
கூட்டிக்கொண்டு, பாவம் அருளிச்செய்கிறார்
‘பொகடும்’ என்று தொடங்கி. என்றது, இவள் ‘மறப்பேன்’
என்ற அன்றும்
மறக்க ஒண்ணாதபடி அவனை நினைப்பதற்குக் காரணமாகையாலே,
பழிகூறுதல் இவளுக்கு வழித்துணையாய்ச்
செல்லுதற்குக் காரணமாயிற்று
என்றபடி. பொகடுதல் - கொண்டுபோய் விடுதல்.
6. “சேரி என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘ஒருவர்’ என்று தொடங்கி.
“பல்பழி” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘இனி ஒருவர்’ என்று
தொடங்கி. ஒருவர் சொல்லிற்று ஒருவர் சொல்லாமையைக் காட்டுகிறார்
‘தன்னை’ என்று தொடங்கி.
7. பழி,
வழிக்குத் துணையாமாற்றினைக் காட்டுகிறார் ‘அலர்’ என்று
தொடங்கி. இது, திருக்குறள். “அலர்
எழ” என்பது, இப்பொழுதுள்ள பாடம்.
|