பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
331

New Page 1

போவாளும் தானாவதே! 1இத்தலை செல்லாதிருத்தற்குச் சொரூப ஞானமே அமையுமேயன்றோ. அனைத்து உலகுமுடைய அரவிந்தலோசனனை - 2இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது. ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ; 3அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. 4அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்; இவள் நெடுங்கண் இளமான். 5அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை. 6கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர்கிடந்து போமத்தனை.

    தினைத்தனையும்விடாள் - 7நெகிழ்ந்து அணைக்கவும் பொறாள். இங்கு இருந்து பட்ட கிலேசத்தாலே ‘நின்னைப் பிரியேன்’ என்று சொல்லவும் நெஞ்சுகொடாள். 8காரியப்பாட்டாலே பிரியிலும் நெஞ்சு ஒழிந்து கேட்கவேணுமே. மனைக்கு வான் பழியும் நினையாள் -

 

1. “இனிப்போய்” என்பதற்கு, சுவாபதேசப்பொருள் அருளிச்செய்கிறார்
  ‘இத்தலை’ என்று தொடங்கி. “நெடுங்கண்” என்கையாலே, தன்முயற்சி
  நீங்கிய அத்யந்தபாரந்திரிய ஞானத்தைச் சொல்லுகிறது என்றபடி.

2. இவள் கண்ணழகிலே உலகநாயகன் ஈடுபட்டிருக்கும் என்று கூறத்
  திருவுள்ளம்பற்றி, அவன் கண்ணழகினை எளிமைப் படுத்துகிறார்
  ‘இவ்வளவே காண்’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
  ‘ஓர் உபயவிபூதி’ என்று தொடங்கி.

3. இவள் கண்களின் ஏற்றத்தை அருளிச்செய்கிறார் ‘அவன் தன்னையும்’
  என்று தொடங்கி.

4. அவன் குறைவினையும் இவள் ஏற்றத்தினையும் பதங்களிலே ஏறிட்டுக்
  காட்டுகிறார் ‘அவன் அனைத்துலகுமுடைய’ என்று தொடங்கி.

5. “நெடுங்கண்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அவன்’ என்று
  தொடங்கி.

6. ஒரு மூலையிலே அடங்கினால், மற்றை இடம் எங்ஙனம் இருக்கும்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கண்ணில்’ என்று தொடங்கி.
  ‘குமர் கிடந்து போம்’ என்றது, குமரி போலே அநுபவயோக்கியம்
  இல்லாமலே பயன் அற்றுப் போம் என்றபடி. குமர் - குமரி.

7. “தினைத்தனையும் விடாள்” என்பதற்கு, இரண்டு வகையாகக் கருத்து
  அருளிச்செய்கிறார் ‘நெகிழ்த்து’ என்று தொடங்கியும், ‘இங்கு’ என்று
  தொடங்கியும்.

8. நெஞ்சு கொடுத்தால் தோஷம் ஏது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘காரியப் பாட்டாலே’ என்று தொடங்கி. என்றது,
  காரியம் காரணமாகப் பிரியப் பார்த்தாலும், ‘பிநிதல் நல்லது’ என்று
  இவள் நெஞ்சிலே படுத்தியே பிரியவேண்டுகையாலே, அநுபவத்தை
  விட்டு அதனைக் கேளாள் என்றபடி.