|
ம
மனைக்கு வலியபழியும் நினைக்கின்றிலள்.
1விருப்பத்தைப் பெறுதற்குச் சாதனம் அல்லாத அளவே அன்று, விரோதி என்றிருக்கிறாள்.
1‘இத் தலையாலே செல்லுமது பழி’ என்றே இருந்தபடி பாரீர்.
2அதபாதக
பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத - 3அடுத்து அடுத்து இராஜசூயமே செய்து போந்தவனுக்கு
ஒரு தடவற் பொய்க்காக நரக தரிசனம் பண்ணுமளவாய் நின்றவனை யன்றோ இப்படி உபதேசிக்கிறது.
4நல்வினைகளோடு தீவினைகளோடு வாசி அற விரோதியாய், கிருஷ்ணனே பற்றுக்கோடு என்னுமிடத்தைத்
தோற்றுவிக்கிறது. விமுக்தாந்யஸமாரம்ப: - அசேதனமான கர்மங்களைப் பற்றிக்கொண்டு நாலாதேகொள்.
நாராயணபரோ பவ - உனக்கு வகுத்தவன் தன்னையே பற்றப்பார். செல்ல வைத்தனள் - 5போதலில்
நெஞ்சினை வைத்தாள் என்னுதல்; நாம் எல்லாம் காண அங்கே ஆனாள் என்னுதல். அதாவது, தான் அங்கே
செல்ல ஒருப்
1. “பழியும்” என்ற உம்மைக்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘விருப்பத்தை’
என்று தொடங்கி. வியாக்யாதாவின் ஈடுபாடு: ‘இத்தலையாலே’
என்று
தொடங்கும் வாக்கியம்.
2. தான்செய்யும் முயற்சி
சொரூபத்திற்கு விரோதம் என்பதற்குப்
பிரமாணமும், பிரமாணத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார்
‘அதபாதக’ என்று தொடங்கி.
“அதபாதகபீத: த்வம் ஸர்வபாவேந
பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப:
நாராயணபரோ பவ”
என்பது, பாரதம். இது, தருமபுத்திரனைப்
பார்த்துத் தர்மதேவதை கூறியது.
3. “பாதகம்” என்ற
சொல், தள்ளத்தக்கது என்ற பொருளைக் காட்டுமே
ஒழிய, வேறு உபாயங்களைச் சொல்லுமோ? என்ன,
இங்கு, “பாதகம்” என்ற
சொல், தன்முயற்சியால் செய்யப்படுகின்ற உபாயாந்தரங்களையே
சொல்லுகிறது; தள்ளத்தக்க காரியங்களைச் சொல்லவில்லை என்று
கூறுவதற்குத் திருவுள்ளம்பற்றி
அதற்கு உபபத்தி காட்டுகிறார் ‘அடுத்து
அடுத்து’ என்று தொடங்கி. தடவற்பொய் - ஆபாசமான
பொய்.
4. ஆயின், ‘புண்யபீதோத’
என்னாமல், “பாதக பீத:” என்பான் என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நல்வினைகளோடு’
என்று தொடங்கி.
இருள்சேர் இருவினையும் சேரா
இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார்
மாட்டு.
என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவனார்.
5. தான்
அங்கே போகையிலே தன் நெஞ்சினை வைத்தாள் என்னுதல்; நாம்
அங்கே செல்லும்படி தன் நெஞ்சினை
வைத்தாள் என்னுதல்.
முதற்பொருளில், நெடுங்கண் இளமான் இனிப்போய், மனைக்கு வான்
பழியும் நினையாதவளாய்க்கொண்டு,
அனைத்துலகுமுடைய
அரவிந்தலோசனனைத் தினைத்தனையும் விடாதே இருக்கவேண்டும்
என்று அவன்சேர் திருக்கோளூர்க்கே
செல்ல ஒருப்பாட்டாள்;
தெய்வங்காள்! நினைக்கிலேன்
|