பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
334

New Page 1

வைப்பாய், ‘உண்டு’ என்ன, உயிர் நிற்கும்படியாய், உடையவன் காலிலே எல்லாரும் விழும்படியாய், உடையவனுக்கு அறவிட்டு ஜீவிக்கலாய், ‘அறவிட்டு ஜீவித்தான்’ என்று ஏசாதபடியாய், 1அவன் தனக்கு பெருமதிப்பைக் கொடுப்பதுமாய், உடையவனுக்கு ஒன்றுக்கும் கரைய வேண்டாதபடியாய், எல்லாம் தன்னைக்கொண்டே கொள்ளலாய், எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக்கொண்டே கொள்ளலாய், இந்தவிதமான குணங்களையுடைத்தாயிருக்கையைப் பற்ற ‘நிதி’ என்கிறது. மாநிதி என்றது, அழியாத நிதி என்றபடியாய், அத்தால், தன்னைக்கொண்டே எல்லாம் கொள்ளாநின்றால் தனக்கு ஒரு குறை அற்று இருக்கை. அல்லாத நிதி மாண்டு நிற்குமே.

    மதுசூதனையே அவற்றி - இந்த நிதியைக் 2காத்து ஊட்டுவதும் தானே என்கிறது. உத்தேசியமானதுதானே விரோதியையும் போக்கி அநுபவிப்பிக்கவற்றாயிருக்கை. கொத்து அலர்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன - 3“வீட்டில் எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்” என்னுமாறு போலே, ஸ்ரீபரதாழ்வன் பெருமாள்

 

  என்றது, செல்வம் என்றால் சென்ற உயிரும் மீளுமாறுபோலே, ‘ஈசுவரன்
  உளன்’ என்றால், போகும் தன்மையுள்ள ஆத்மசத்தையும் தரிக்கும்
  என்றபடி. ‘அறவிட்டு ஜீவிக்கலாய்’ என்றது, இவன் சர்வேசுவரனைப் பற்றி
  உத்தேசிக்க, உபதேசத்தைப் பெற்ற சிஷயன், தன் சக்திக்குத் தகுதியாகச்
  சிறிது செல்வத்தைக் கொடுக்க, அதனை ஏற்றுக்கொண்டு ஜீவிக்கலாய்
  என்றபடி. அறவிட்டு - விற்று. ‘அறவிட்டு ஜீவித்தான் என்று
  ஏசாதபடியுமாய்’ என்றது புத்திரன் முதலானோர்களை விற்று ஜீவித்தால்
  பழியாநிற்பர்கள்; நிதியை விற்று ஜீவித்தால் பழிப்பாரில்லையே;
  அப்படியே, தங்கள் ஆதரத்தால் சிஷ்யர்கள் கொடுத்ததை வாங்கி
  ஜீவித்தால் நிந்தியாதபடியாயிருக்கும் என்கை.

1. ‘அவன் தனக்குப் பெருமதிப்பைக் கொடுப்பதுமாய்’ என்றது, செல்வம்,
  தன்னையுடையவனுக்கு ஒருவருக்கும் அஞ்சவேண்டாதபடி பெருமதிப்பைக்
  கொடுக்குமாறுபோலே, சர்வேசுவரனும் தன்னையடைந்தவர்களுக்கு யமன்
  முதலானோர்கட்கும் அஞ்சவேண்டாதபடியான பெருமதிப்பை
  உண்டாக்குவான் என்றபடி.

2. ‘காத்து ஊட்டுவதும் தானே’ என்றது, விரோதி வாராமல் காத்துப்
  புஜிப்பிக்குமதுவும் தானே என்றபடி. இதனை விவரணம் செய்கிறார்
  ‘உத்தேசியமானது தானே’ என்று தொடங்கி. இதனால், பிராப்பியமானது
  தானே பிராபகமுமாக இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.

3. தாம் பிரிவினாலே துக்கியாநிற்க, சோலை இப்படி மலர்ந்து நிற்றல்
  கூடுமோ? என்ன, அதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘வீட்டில்’ என்று
  தொடங்கி.

  “பங்கதித்த: உ ஜடில: பரத: த்வாம் ப்ரதீக்ஷதே
   பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வஞ்ச குஸலம் க்ருஹே”

 
என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 5.