பக
பக்கலிலே நெஞ்சினை வைக்க
வைக்க, அதனைக்கண்டு, ‘அவர் வரவு அணித்து’ என்று திருவயோத்தியை தளிரும்
முறியுமானாற்போலே, விரஹத்தை நினைக்க ஆற்றலில்லாதபடி அவன் பக்கலிலே ஏகாக்ர சித்தராகையாலே
பிறந்த தோற்றத்தாலே, திருநகரியும் தளிரும் முறிவுமானபடி. 1இத்தலையிலே இத்தனை
விரைவு உண்டானால் அத்தலையால் வருகிற பலத்துக்குக் கண்ணழிவு உண்டோ? 2“மரங்களும்
உலர்ந்தன” என்கை தவிர்ந்து “காலமல்லாத காலத்தும் மரங்கள் பலத்தைக் கொடுத்தன” என்னும்படியாயிற்று.
பத்து நூற்றுள் இப்பத்து - கடலில் அமுதம் போலே, ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து.
அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து - அவன் பொருந்தி வாழ்கின்ற திருக்கோளூர்க்கே
நெஞ்சை வைத்து. உரைப்பார் - சொல்லுவார். திகழ் பொன்னுலகு ஆள்வாரே - ஒருத்தி கூப்பிட,
ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்தியாநுபவம் பண்ணலாம் நிலத்திலே புகப்பெறுவர். தனிவழி
போகாதே, அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான தேசத்தே போய்ப் புகப்பெறுவர்
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
உண்ணும்சோ றாதி
ஒருமூன்றும் எம்பெருமான்
கண்ணன்என்றே நீர்மல்கிக்
கண்ணிணைகள் - மண்ணுலகில்
மன்னுதிருக் கோளூரில்
மாயன்பாற் போமாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்.
(57)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
1. இவர்க்கு ஆற்றாமை உண்டானால்
அவன் வரவு அணித்தாக
வேண்டுமோ? என்ன, ‘இத்தலையிலே’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
என்றது, யாதானும் பற்றி நீங்குகிறவன் அநுகூலித்தால்,
எதிர்சூழல் புக்குத் திரிகிறவனுக்குக் கண்ணழிவுண்டோ?
என்றபடி.
கண்ணழிவு - காலதாமதமும், குறையும்.
2. அவன் வரவு அணித்தானால்
கொத்தலர் பொழில் ஆகைக்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘மரங்களும்’ என்று தொடங்கி.
“அபிவ்ருக்ஷா:” என்பது, ஸ்ரீராமா.
அயோத். 59 : 5.
“அகால பலிநோ வ்ருக்ஷா:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 127, 19.
3. “திகழ்”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒருத்தி’ என்று தொடங்கி.
அதனை விவரணம் செய்கிறார்
‘தனிவழி போகாதே’ என்று தொடங்கி.
|