பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
336

எட

எட்டாந் திருவாய்மொழி - “பொன்னுலகு”

முன்னுரை

    ஈடு :- 1மேல் திருவாய்மொழிகள் இரண்டும், மோஹமும் உணர்த்தியுமாய், இதில் தூதுவிடுகிறதாக அன்றோ இருக்கிறது; 2மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர்க்கு 3“மரணத்தில் பாதி அவஸ்த்தை” என்னும் மோஹம் இல்லையே; 4இனி இவர்க்கு மோஹமாவது, புறத்திலேயுள்ள பொருள்களை நினைத்தற்கும் இயலாதவராய் விஷயங்களினின்றும் அந்தக் கரணம் விடுபட்டதாய், மனத்திற்கு அவனே விஷயமாய், அவன் குணங்களையே அநுபவித்தல். அதாவது, ஆத்மாவாய் இருப்பவனே ஞானத்திற்கு விஷய

 

1. ஆழ்வாருடைய மோஹநிலையும் உணர்ச்சிநிலையும், நாட்டாருடைய
  மோஹநிலை உணர்ச்சிநிலைகளைக் காட்டிலும் வேறுபட்டன என்பதற்கு
  உறுப்பாக விஷயங்களை அருளிச்செய்யத் தொடங்குகிறார் ‘மேல்
  திருவாய்மொழிகள் இரண்டும்’ என்று தொடங்கி.

2. ஞானாதிகரான இவர்க்கு, நனவு கனவு சுஷுப்தி என்பவைகளோடு
  சேர்த்துக் கூறப்படுகின்ற மோஹம் கூடுமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘மயர்வற’ என்று தொடங்கி. என்றது, இவருடைய
  மோஹம், நனவு கனவு முதலியவைகளோடு சேர்த்துக் கூறப்படுகின்ற
  மோஹம் அன்று என்றபடி.

3. உலகத்திலே, ஒவ்வொருவருக்கும் நனவு கனவு சுஷுப்தி மூர்ச்சை மரணம்
  என்று சொல்லப்படுகின்ற ஐந்து அவஸ்த்தைகள் உண்டு; அவற்றுள்,
  நனவாவது, புறக்கரணங்களும் அந்தத்கரணமும் தனதுதனது
  விஷயங்களை அறிந்து பற்றுகிற நிலை. கனவாவது, புறக்கரணங்கள்
  எல்லாம் அடங்க மனம் மாத்திரம் சஞ்சரித்துக்கொண்டிருக்க, இந்தச்
  சரீரத்தோடு ஒத்த வேறு சரீரங்களையும் பகலில் காண்கிற
  விஷயங்களோடு ஒத்த விஷயங்களையும் ஈசுவரன் உண்டாக்க,
  அதுகாரணமாக, முடிசூடுதல் முதல், தலை அறுப்புண்ணல் இறுதியாகக்
  காண்டல். சுஷு ப்தியாவது, புறக்கரணங்களும் மனமும் அடங்க, உச்வாச
  நிஸ்வாசங்களாலே பிராணன் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க,
  நனவிலே தன்தன் விஷயங்களிலே இந்திரியங்கள் பரந்திருந்த
  காரணத்தால் வந்த இளைப்பெல்லாம் மாறும்படி, புரீதத் என்கிற
  நாடியிலே பரமாத்மாவின் சொரூபத்திலே சேர்ந்து சிரமம் எல்லாம் நீங்கி
  இருத்தல். மூர்ச்சையாவது, சூக்கும பிராணனோடும் சூக்கும சரீரத்தோடும்
  சம்பந்தப்பட்டிருக்கும் நிலை. மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேக
  சம்பந்தத்தினின்றும் நீங்குதல். இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி
  அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே
  சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம்பற்றி ‘மரணத்தில் பாதி
  அவஸ்த்தை’ என்கிறார். சாரீரகமீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10.
  காண்க.

4. இவருடைய மோஹத்தின் தன்மையை அருளிச்செய்கிறார் ‘இனி இவர்க்கு’
  என்று தொடங்கி.