பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
337

மாய்த் தன்னை மறக்கை. 1மேல் திருவாய்மொழியில் நிலை “நான் மநு ஆகின்றேன்” என்றும், “அனந்தன் என்னும் திருநாமமுள்ள அப் பரம்பொருள் எங்கும் இருப்பதால் நான் அப் பரம்பொருளாகவே இருக்கிறேன்” என்றும் சொல்லுகிற நிலைபோலே. 2உணர்த்தியாவது, “அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத் தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப்போலே தம்மையும் உணரக்கூடியவராய் உலக விருத்தாந்தத்தையும் நினைக்கக் கூடியவராதல். 3நிர்க்குணமான விஷயத்திலே அன்றே இவர் மூழ்கியது, குணாதிக விஷயத்திலே யன்றோ. சேஷிபக்கலிலே நினைவுண்டானால் சேஷபூதனான தன்னையும் காணும் அன்றோ. மேல், நெடும் போது அவன் குணங்களை நினைக்கையாலே தரித்து வலிமை குறைவும் நீங்கிப் புறத்திலேயுள்ள பொருள்களையும் நினைக்கக்கூடிய நிலையை அடைந்தார்; 4அவ்வளவிலே, இவர் தரித்தவாறே பழைய

 

1. “மாலுக்கு” என்ற திருவாய்மொழியிலும், “உண்ணுஞ் சோறும்” என்ற
  திருவாய்மொழியிலும் உண்டான மோஹத்தையும், உணர்ச்சியையும்
  திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார் ‘மேல்’ என்று தொடங்கி. ‘மேல்
  திருவாய்மொழியில்’ என்றது, “மாலுக்கு” என்ற திருவாய்மொழியில்
  என்றபடி.

  “அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
  “சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.

2. ‘உணர்த்தியாவது’ என்றது, “உண்ணும் சோறும்” என்ற திருவாய்மொழியில்
  உண்டான உணர்த்தியாவது என்றபடி.

  “த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத்யுபலக்ஷணம்
   ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.

3. “மாலுக்கு” என்ற திருவாய்மொழியிலே, விஷயம், தனக்கு மேல்
  ஒன்றில்லாததான இனிமையையுடையதாகையாலும், தாமும் எல்லையில்லாத
  அன்பினையுடையவராகையாலும் ஏகாக்ரமான அநுபவம் செல்லா நிற்க,
  “உண்ணும் சோறும்” என்ற திருவாய்மொழியில், தம்மை உணர்ந்து
  அநுசந்திக்கக்கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘நிர்க்குணமான’ என்று தொடங்கி. என்றது, அவனுடைய சேஷித்லமும்
  குணமாகையாலே, அந்தச் சேஷித்வகுணத்தை அநுசந்தித்தால்
  சேஷித்வத்திற்கு எதிர்த்தொடர்புள்ள சேஷமாக இருக்கிற தம்மையும்
  காணலாம் என்றபடி.

4. ஆக, இப்படி மேல் திருவாய்மொழிகட்குச் சுவாபதேசப் பொருள்
  அருளிச்செய்து, இத்திருவாய்மொழிக்குச் சுருக்கமாகச் சங்கதி
  அருளிச்செய்கிறார் ‘அவ்வளவிலே’ என்று தொடங்கி. ‘அவ்வளவிலே’
  என்றது, தம்மையும் உலக விருத்தாந்தத்தையும் நினைக்கக்கூடியவரான
  அளவிலே என்றபடி.