பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
338

அல

அலாபமே தலையெடுத்து ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தவராய் அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

    1மேல் திருவாய்மொழியில், திருத்தாயார் “எங்ஙனே புகுங்கொல்?” என்று நொந்ததுவே பலித்து, 2தன் சாபலத்தாலே புறப்பட்டாள், முடியப் போய்ப் புக மாட்டாமல் தன்னுடைய நகரத்தை அடுத்த உபவனத்திலே விழுந்து கிடந்து, அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே, கண்ட பறவைகளையெல்லாம் தூதுவிடுகிறாள். 3தனிவழியே புறப்பட்டுப் போம்படியாய் விழுந்த இவளுக்குத் தூது போவார் இலரே; 4உண்டானாலும் இவள் தனக்கு முன்னே ஈடுபட்டுக் கிடப்பர்களே; இனித் தன் பக்கத்தில் வசிக்கிற பறவைகளுக்கு மேற்படக் கால்நடை தந்து போகவல்லார் இலரே; இவ்வளவிலே நீங்கள் என்நிலையை அறிவிக்கவேணும் என்று அவற்றின் காலிலே விழுகிறாள். 5“அஞ்சிறைய மடநாராய்” என்ற திருவாய்மொழியில் என்னை நினைத்தானத்தனை, தன்னை மறந்தான் என்றாள்; இத் தலையில் அபராதம் பாராதே, அத் தலையில் அபராதத்தைச் சகித்துக் கோடல் பற்றாசாக, அபராதத்தைச் சகித்துக்கொள்ளும் தன்மையைப் பார்த்து வருவது என்று ஆள்விட்டாள். “வைகல் பூங்கழி” என்ற திருவாய்மொழியில், 6இருவரையும் அவ்வூரில்

 

1. இத் திருவாய்மொழியில் கூறப்பட்ட பொருளை விரித்து
  அருளிச்செய்கிறார் ‘மேல் திருவாய்மொழியில்’ என்று தொடங்கி.

2. ஒரு காரியத்துக்குப் போவார், தம்மை அறிந்து புறப்பட வேண்டாவோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தன் சாபலத்தாலே’ என்று
  தொடங்கி. புறப்பட்டாள் - புறப்பட்டவள்; பெயர்.

3. பறவைகளைத் தூதுவிடுகிறது என்? வேறு சிலர் இலரோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘தனிவழியே’ என்று தொடங்கி.

4. “மங்கைமார் முன்பு” என்று சொல்லப்படுகிற தோழிமார் இலரோ? என்ன,
  ‘உண்டானாலும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  இவ்வளவிங் - தோழிமாரும் உதவாத நிலையில்.

5. மேலே, இருமுறை தூதுவிட்டாளே? அவற்றிற்கும் இதற்கும் வாசி யாது?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அஞ்சிறைய’ என்று தொடங்கி.
  என்னை-பாபம்செய்த என்னை. தன்னை-அபராதங்களைப் பொறுக்கின்ற
  தன்னை.

6. “வைகல்பூங்கழிவாய்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில்,
  ‘அவ்விடங்களிலே துன்புறுவார் பலர் உளராகையாலே அவர்கள்
  ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத்தலையை மறந்தானித்தனை’ என்றார்; இங்கு,
  ‘இருவரையும் அவ்வூரில் உள்ள இனிமை மறக்கப்பண்ணிற்று என்றாள்’
  என்கிறார்; இதுவும் ஒரு நிர்வாகம் என்று கண்டுகொள்வது. ‘இருவரையும்’