|
உலகங
உலகங்களையும் படைத்த
முகில்வண்ணனும் கண்ணபிரானும் என்னுடைய நலத்தை எல்லாம் கொண்ட உபகாரகனுமான எம்பெருமானுக்கு,
என்னுடைய நிலையைச் சொல்லுங்கோள்; அவ்வாறு சொல்லி, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாகப்
பரமபதத்தையும் மற்றுமுள்ள எல்லா உலகங்களையும் நான் கொடுக்க நீங்கள் ஆளுங்கோள் என்கிறாள்.
வி-கு :-
புள்ளினங்காள்! இரந்தேன்; என்நிலைமை
உரைத்துப் பொன்னுலகு ஆளீரோ! புவனிமுழுது ஆளீரோ! என்க.
ஈடு :-
முதற்பாட்டு. 1சில புள்ளினங்களைக் குறித்து,
எம்பெருமானுக்கு என்நிலையை அறிவித்து இரண்டு உலகங்களையும் நான் தர நீங்கள் ஆளவேணும் என்று
இரக்கிறாள்.
பொன் உலகு ஆளீரோ
- 2ஈசுவரனுடைய விபூதியானது பிரிவு நிலையில் அவனையும் தன்னையும் சேர்த்தார்க்குப்
பரிசிலாகக் கண்டது என்று இருக்கிறாள். இரண்டு விபூதிகளும் ஒரு மிதுனத்துக்கு அடிமை அன்றோ.
3அந்த நிலை பிறந்தால் சொல்லலாம் அன்றோ. 4சர்வேசுவரன் இருக்க
இவ்விடம் அராஜகமாய்க் கிடக்கிறது என்றிருக்கிறாள். 5பிரகிருதி சம்பந்தம் அற்று
ஒருதேச விசேடத்திலே போய் அநுபவிக்குமதனை இங்கே இருந்தே கொடுக்கிறாள். 6பிரகிருதியோடே
கொடுப்பாரும் பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துக்
1. “புள்ளினங்காள்!
பிரான் தனக்கு என் நிலைமை உரைத்து, பொன்னுலகு
ஆளீரோ” என்பன போன்ற பதங்களைக் கடாக்ஷித்து
அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. சர்வேசுவரனுக்குரியதான
உலகங்களைக் கொடுப்பதற்கு இவளுக்குப்
பிராப்தி உண்டோ? என்ன, ‘உண்டு’ என்று திருவுள்ளம்பற்றி,
இதற்கு
மூன்றுவகையாக விடை அருளிச்செய்கிறார். ‘ஈசுவரனுடைய விபூதியானது’
என்று தொடங்கும்
வாக்கியம், முதல் விடை. ‘இரண்டு விபூதிகளும்’
என்று தொடங்கும் வாக்கியம், இரண்டாவது விடை.
‘காதலனைப் பிரிந்து’
என்று தொடங்கும் வாக்கியம், மூன்றாவது விடை. விபூதி-உலகம்.
பரிசில்-உபகாரம்.
மிதுனம் - இரண்டு; பெருமாளும் பிராட்டியும்.
3. இருவர்க்கும் சேஷமானால்,
பிராட்டியார் கொடுக்கலாமே ஒழிய, இவர்
கொடுக்கலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அந்த நிலை
பிறந்தால்’ என்று தொடங்கி. அந்த நிலை - பிராட்டி நிலை.
4. “ஆளீரோ” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘சர்வேசுவரன்’ என்று
தொடங்கி.
5. “பொன்னுலகு” என்ற பதத்துக்குக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘பிரகிருதி
சம்பந்தம்’ என்று தொடங்கி. ‘இங்கே இருந்தே’ என்றது,
இங்கே
இருக்கச்செய்தேயும் என்றபடி.
6. இப்படி
இவள் கொடுத்தது போன்று, பெருமாளும் பெரியவுடையார்க்குக்
கொடுத்தார் என்று கொண்டு, அவரைக்காட்டிலும்
இவளுக்கு வாசி
அருளிச்செய்கிறார் ‘பிரகிருதியோடே’ என்று தொடங்கி. ‘பிரகிருதியோடே
கொடுப்பார்” என்றது, ஆழ்வாரை. ‘அறுத்துக் கொடுப்பார்’ என்றது,
பெருமாளை.
|