|
New Page 1
கொடுப்பாருமாய் இருக்கிறபடி.
1ஒருவரை ஒருவர் பிரிந்து துழாவுகிற சமயத்திலே கொடுக்கை இருவர்க்கும் ஒக்கும்.
2சேர்க்கைக்காக உடம்பு இழப்பாரும் உடம்போடே கூடி நின்று சேரவிடுவாருமாய் அன்றோ
இவர்கள் இருப்பது. உங்கள் உலகமும் நான் பட்டது படவேணுமோ? என்பாள் ஆளீரோ என்கிறாள்.
3காதலனைப் பிரிந்து சேர்ப்பாரைத் தேடித் திரிகிற இவள், சேர்ப்பிப்பார்க்கு
இரண்டு உலகங்களையும் கொடுக்கிறாள் அன்றோ, அவனை நினைத்திருந்த கனம். 4கலந்தபோது
தன்னுடைமையையும் தன்னையும் இவளுக்கு ஆக்கிப் பிரிந்தபோது மாறுவான் ஒரு புல்லியனோடு அன்றே இவள்
கலந்தது. 5தான் இல்லாத சமயத்திலும் இவள்தான் இப்படி இரண்டு உலகங்களையும் இஷ்ட
விநியோகார்ஹமாக்கும்படி அன்றோ, அவன் தன்னையும் தன்னுடைமையையும் இவளுக்கு ஆக்கிவைத்தபடி.
‘அருளாளப்பெருமாள் எம்பெருமானார் நோவிலே,
பிள்ளையுறங்காவில்லிதாசரைக்கொண்டு ஆழ்வான் புக, 4ஆழ்வான்
1. கொடுப்பதில் வாசி
இருப்பதைப் போன்று, கொடுக்கும் காலத்திற்கும் வாசி
உண்டோ? என்ன, ‘ஒருவரை’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார். துழாவுகிற - தடுமாறுகிற.
2. இவர்கள் இப்படிக்
கொடுக்கைக்குக் காரணம் யாது என்ன? அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘சேர்க்கைக்காக’ என்று
தொடங்கி. என்றது,
பெரியவுடையார் சேர்க்கைக்காக, உடம்பை இழக்கையாலே அதனை
அறுத்துக்கொடுத்தார்.
இப்பறவைகள் உடம்போடே நின்று சேர
விடுகையாலே அதனோடே கொடுக்கிறாள் என்றபடி. இவர்கள் -
பறவைகளும் பெரியவுடையாரும்.
3. ஈசுவரனுக்குரிய உலகத்தை
இவள் கொடுப்பதற்குப் பிராப்தி ஏது? என்ற
வினாவிற்கு மூன்றாவதாக கூறும் விடையை அருளிச்செயகிறார்
‘காதலனைப் பிரிந்து’ என்று தொடங்கி. ‘நினைத்திருந்த கனம்’ என்றது,
கலந்தபோது தன்னையும்
தன்னுடைமையையும் கொடுத்ததை
நினைத்தமையாலுண்டான கனம் என்றபடி.
4. கலக்கும் காலத்தில்
சொன்னதைக் கொண்டு கொடுக்கலாமோ? என்ன,
‘கலந்தபோது’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
5. ஆனாலும்,
கொடுக்கும்போது அவன் இருக்க வேண்டாவோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தான் இல்லாத
சமயத்திலும்’ என்று
தொடங்கி.
6. தன்னையும்
தன்னுடைமையையும் இவர் இட்ட வழக்கு ஆக்கி இவர்க்கு
அவன் பரதந்திரனாயிருக்கையாலே, இவர்
கொடுக்கலாம் என்னுமதனை
ஓர் ஐதிஹ்யமுகத்தால் விளக்குகிறார் ‘அருளாளப்பெருமாள்
எம்பெருமானார்’
என்று தொடங்கி. அருளாளப் பெருமாள்
எம்பெருமானார், பிள்ளையுறங்கா வில்லிதாசர், ஆழ்வான்
இம்மூன்று
பெரியார்களும் எம்பெருமானார்க்கு மாணாக்கர்கள். ஆழ்வான் -
கூரத்தாழ்வார்.
‘ஆழ்வான் செய்த செஞ்சாறல்’ என்றது,
கூரத்தாழ்வார்க்குப் பரமபதத்தைக்
|