பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
345

    இது அக்கரையாகவும் சொல்லாநின்றார்கள் அன்றோ. 1“மாகவை குந்தம் காண்பதற்கு என்மனம் ஏகம் எண்ணும்” என்றே அன்றோ இருப்பது. 2பிராப்தி தசையிலும் முற்பட்டிருப்பது அவ்விடமே அன்றோ. 3அவன் உடைமை என்னும் தன்மையாலே ஒருகால் உத்மேசியமாமது அன்றோ இவ்விடம். 4“முக்தன் ஜனங்களின் மத்தியில் இருந்த இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” என்னாநிற்கச் செய்தேயும், அவனுடைய செல்வத்தில் குறை அநுபவிக்க ஒண்ணாது என்று அவன் உடைமை என்னும் தன்மையாலே ஒருகால் பற்றத்தக்கது என்ற எண்ணம் உண்டு இத்தனை அன்றோ. 5இல்லையாகில், வேறு ஒருவகையில் எண்ணம் உண்டாகில் ‘புவனி முழு தாளீரோ!’ என்று, கட்டடங்க உத்தேஸ்யமாய்த் தோற்றாதே அன்றோ. பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ - 6அடிமைக்கு அடைத்து ஏற்றலாயன்றோ இவ்விடந்தான் இருப்பது; அவ்விடம் அடிமையால் அல்லது செல்லாத இடமாய் அன்றோ இருப்பது. அன்றிக்கே, 7தூதுபோனாரது பரமபதம், அது உடையாரது லீலாவிபூதி என்னுதலுமாம்.

    புவனிமுழுது ஆளீரோ - உத்தேசியமான நித்தியவிபூதியைக் கொடுத்தவள், தியாச்சியமான லீலாவிபூதியைக் கொடுப்பான் என்?

 

1. அங்ஙனம் அணித்தாகத் தோற்றுவதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
  ‘மாகவைகுந்தம்’ என்று தொடங்கி. இது, திருவாய். 9. 3 : 7. என்றது,
  பேற்றினைப் பெறும் விரைவாலே எப்போதும் அவ்விடத்தினையே
  நினைத்துக்கொண்டிருக்கையாலே அது அணித்தாய்த் தோற்றும் என்றபடி.

2. மூன்றாம் வகையை அருளிச்செய்கிறார் ‘பிராப்தி தசையிலும்’ என்று
  தொடங்கி.

3. பிராப்தி தசையில் இவ்விடம் உத்தேசியம் அன்றோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘அவன் உடைமை’ என்று தொடங்கி.

4. ‘ஒருகால்’ என்கிறது என்? எப்பொழுதும் உத்தேசியமானாலோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘முக்தன்’ என்று தொடங்கி.
  “நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.

5. ‘அவன் உடைமை என்னும் தன்மையால் உத்தேசியம்’ என்பது என்?
  இயல்பாகவே உத்தேசியம் என்றாலோ? எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இல்லையாகில்’ என்று தொடங்கி. “முழுது”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றிக் ‘கட்டடங்க’ என்கிறார்.

6. ஆக, ‘கைப்பட்டதனை முந்தறக் கொடுக்கிறாள்’ என்பதற்கு, இப்படி
  மூன்று வகையாகக் காரணத்தை அருளிச்செய்து, நான்காவதாக வேறு
  ஒரு காரணத்தை அருளிச்செய்கிறார் ‘அடிமைக்கு’ என்று தொடங்கி.
  ‘அடைத்து ஏற்றல்’ என்றது, இங்கேயுள்ள மேட்டுமடை, விரோதி,
  ஆகந்துகம் என்னும் இவற்றைத் திருவுள்ளம்பற்றி.

7. ‘தூதுபோனாரது பரமபதம்’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக்
  கருத்து, பிரதானத்தைக் கொடுத்தால், அப்ரதாளம் தன்னடையே அவற்றிற்கு
  அதீனமாம் என்பது.