|
என
என்னில், இவை செய்கிற
உபகாரத்தை நினைத்து, ‘இன்னது கொடுப்போம்’ என்று அறியாமல் கலங்கி. 1பண்டு
கலங்கினாரும் இப்படியே செய்தார்கள்; 2“திரும்புதலில்லாதவர்களுக்கும் பூமிதானஞ்
செய்தவர்களுக்கும் எந்த எந்த கதிகளுண்டோ அந்த அந்த மேலானவுலகங்களை என்னால் நீவிர் அநுமதிக்கப்
பட்டவராய் அடைவீராக” என்று சொன்னார்கள். 3பிரீதி அளவு பட்டிருக்கிலன்றோ தெளிந்திருப்பது.
4“வெள்ளி என்ன, தங்கம் என்ன, பலவிதமான இரத்தினங்கள் என்ன, மூன்று உலகங்களின்
இராச்சியம் என்ன, ஆகிய இவைகள் எல்லாம், நீ பேசிய இனிய வார்த்தைகளுக்குத் தக்கவையல்ல”
என்று கலங்கினாள் அன்றோ. 5இருவரும் கொடுக்கலாம் படி ஒரு மிதுனத்துக்கு அடிமையாக
அன்றோ உபயவிபூதியும் இருப்பது.
நல் நலம் புள்
இனங்காள் - 6அவனிலும் உங்களுக்கு உண்டான நீர்மையில் ஏற்றம் இருந்தபடி என்!
7இவ்வளவில் ஆள்
1. இப்படிக் கலங்கிக்
கொடுத்த பேர் உளரோ? என்ன, ‘உளர்’ என்று அதற்கு
இரண்டு உதாரணம் காட்டுகிறார் ‘பண்டு’ என்று
தொடங்கி.
2. “யாகதி: யஜ்ஞஸீலாநாம்
ஆஹிதாக்நே: ச யா கதி:
அபராவர்த்திநாம் யாச
யாச பூமிப்ரதாயிநாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாத:
கச்சலோகாந் அநுத்தமாந்”
என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 68. 29,
30. பெரிய உடையாரைக் குறித்துப்
பெருமாள் அருளிச்செய்தது.
3. இப்படிக் கலங்குகைக்குக்
காரணம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பிரீதி’ என்று தொடங்கி.
4. “ஹிரண்யம்வா ஸுவர்ணம்வா
ரத்நாநி. . . . . .அர்ஹதி பாஷிதம்” என்பது,
ஸ்ரீராமா. யுத். 116 : 20. இது, இராவணனைக்
கொன்றபடி வந்து வெற்றியைக்
கூறிய திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. இச்சுலோகத்தில்,
“திரிஷு லோகேஷு ராஜ்யம்” என்றதிலே, வெள்ளி முதலானவை
அடங்கியிருக்கவும், பிரித்துச்
சொன்னது கலக்கத்தின் காரியம் என்றபடி.
கம்பராமாயணம் யுத்தகாண்டம் மீட்சிப்படலம்
20-முதல் 29-முடியவுள்ள
செய்யுட்களைக் காணல் தகும்.
5. மூன்று உலகங்களையும்
கொடுப்பதற்கு இவளுக்குப் பிராப்தி உண்டோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இருவரும்’
என்று தொடங்கி.
மிதுனம் - இரட்டை; இங்கே, பெருமாளும் பிராட்டியும்.
6. “நலம்” என்பதற்குக்
கிருபை, கொடை, குணங்களின் தொகுதி, சிநேகம் என
நான்குபொருள் அருளிச்செய்கிறார். ‘கிருபை
என்ற பொருளில், “நல்” என்ற
அடைமொழியால் சர்வேசுவரனுடைய கிருபையைப் பிரிக்கிறது என்கிறார்
‘அவனிலும்’ என்று தொடங்கி.
7. அவன்
கிருபையைக் காட்டிலும் எங்கள் கிருபைக்கு ஏற்றம் யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இவ்வளவில்’ என்று தொடங்கி. ‘ஆள்
இட்டு அழைக்கும்படி’ என்றது, இளையபெருமாளை இட்டு மஹாராஜரை
அழைப்பித்தாற்போலே அழைப்பிக்கும்படி இராதே என்றபடி.
|