பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
348

படியும், ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட 1மணக்கால்நம்பி படியும் போலே இருந்ததேஉங்கள்படி! நன்னலம் புள்ளினங்காள் - 2அழகிய நீர்மையையுடைய புள்ளினங்காள் என்னுதல், மிக்க சிநேகத்தையுடைய புள்ளினங்காள் என்னுதல்.

    3
இருவருமான சேர்த்தி ஒழிய வேறும் ஒன்றைத் தரவோ? என்று சிரித்திருந்தன. 4“பகைவர்களைக் கொன்றவரும் வெற்றியோடு கூடியவரும் இப்படி இருப்பவருமான ஸ்ரீராமபிரானைப் பார்க்கிறேன் என்பது யாது ஒன்று உண்டோ, பார்க்கிற அந்தப் பிரயோஜனத்தினால் தேவராஜ்யம் முதலான மேன்மைகள் என்னால் அடையப்பட்டன” என்றான் திருவடி. நல் நலம் - 5அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்கமாட்டேன்’ என்னும் யானும், ரகு வம்ச: ச - என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,

 

1. மணக்கால் நம்பி - ஆளவந்தாருடைய ஆசாரியர். ‘பச்சை இட்ட’ என்றது,
  ஸ்ரீ ஆளவந்தாருக்குப் பிரியமான தூதுவளைக் கீரையை நாடோறும்
  கொண்டுவந்து கொடுத்து உபசரித்ததனைக் குறித்தபடி.

2. “நலம்” என்பதற்கு, சிநேகம் என்றும், கிருபை என்றும் கூறிய பொருள்களை
  விவரிக்கிறார் ‘அழகிய நீர்மையையுடைய’ என்று தொடங்கி.

3. சிநேகம் என்ற பொருளில் “நன்னலம்” என்றதற்கு அவதாரிகை
  அருளிச்செய்கிறார் ‘இருவருமான’ என்று தொடங்கி.

4. அப்படி இருவருமான சேர்த்தியே உத்தேசியமாய் ‘வேறு ஒன்று வேண்டா’
  என்று சொன்ன பேர் உளரோ? என்ன, ‘உளர் என்று அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘பகைவர்களைக் கொன்றவரும்’ என்று தொடங்கி.

  “அர்த்ததஸ்ச மயா ப்ராப்தா தேவராஜ்யாதய: குணா:
   ஹதசத்ரும் விஜயிநம் ராமம் பஸ்யாமி ஸுஸ்திதம்”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 24. பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.

5. நலம் என்பதற்கு, கிருபை என்ற பொருளில், இப்படிப் போற்றிய பேர்
  உளரோ? என்ன, ‘உளர்’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அஹம்ச’ என்று தொடங்கி.

  “அஹம்ச ரகுவம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹாபல:
   வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரிரக்ஷிதா:”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது, திருவடியைப் பார்த்துப் பெருமாள்
  கூறியது. உழைக்கும்படி - தடுமாறும்படி.

  தீவினை யாம்பல செய்யத் தீர்விலா
  வீவினை முறைமுறை விளைய மெய்ம்மையாய்!
  நீஇவை துடைத்துநின் றளிக்க நேர்ந்ததால்
  ஆயினும் அன்பினாய் யான்செய் மாதவம்.

 
என்பது, கம்பராமாயணம், மீட்சிப்பட, 330.