பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
349

மஹ

மஹா பல: லக்ஷ்மணஸ்ச - இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஏதுவான பிள்ளை இலக்குமணனும், வைதேஹ்யா: - இவை எல்லாம் தகும் என்கைக்காக, தர்மத: பரிரக்ஷிதா: - நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ? வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;” ‘உனக்கு என்செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள். புள் - 1இந் நீர்மையில் ஏற்றமுடைய உங்களுக்கே பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதம் உண்டாகப் பெறுவதே! 2பிரிந்தாரைச் சேர்க்கை திர்யக்குக்களின் காரியம் என்று இருக்கிறாள், இராமாவதாரத்தில் வாசனையாலே. 3“குற்றம் செய்யாதார்யாவர்” என்பாரும்கூட உண்டாயிருக்கிறபடியைத் தெரிவிப்பாள் ‘இனங்காள்’ என்கிறாள். அன்றிக்கே, உடலும் உயிரும் கூடக் கிடக்கப் பெறுவதே! என்பாள் ‘இனங்காள்’ என்கிறாள் என்னுதல். 4“ஓ இராகவனே, செல்ல அரிதான காட்டிற்கு உமக்கு முன்பு செல்வேன்” என்று முன் நடப்பாரும்கூட இருக்கிறபடி. அன்றிக்கே, 5“எல்லாத் திக்குக்களிலும் தேடுகிறார்கள்” என்கிறபடியே, எல்லாத் திக்குக்களிலும் போகவிடலாம்படி திரள் இருக்கிறபடி என்றுமாம்.

 

1. “புள்” என்றதற்கு, கருத்து அருளிச்செய்கிறார் ‘இந்நீர்மையில்’ என்று
  தொடங்கி.

2. வார்த்தை சொல்லமாட்டாத பறவைகள் சேர்க்கக்கூடுமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘பிரிந்தாரை’ என்று தொடங்கி.

3. “இனம்” என்பதற்கு, இங்கு, இருவர் என்றும், கூட்டம் என்றும் பொருள்
  அருளிச்செய்கிறார். இருவர் என்ற பொருளில், தனக்குப் புருஷ காரம்
  உண்டு என்பதும், தன்னைப்போல் பிரிந்திருத்தலின்றி ஒன்றனோடு ஒன்று
  கூடியிருக்கப் பெறுவதே என்பதும் கருத்து. இவ்விருவகையான
  கருத்துக்களையும் முறையே அருளிச்செய்கிறார் ‘குற்றம் செய்யாதார்’
  என்று தொடங்கி. “நகஸ்சித் நாபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத்.
  116 : 44.

4. அதனை விவரணம் செய்கிறார் ‘ஓ இராகவனே,’ என்று தொடங்கி.
 
  “அக்ரத:தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸகண்டகாந்”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 9. இது, பெருமாளைப் பார்த்துப் பிராட்டி
  கூறியது.

5. “இனம்” என்பதற்கு, கூட்டம் என்ற பொருளில் பாவம் அருளிச்செய்கிறார்
  ‘எல்லாத் திக்குக்களிலும்’ என்று தொடங்கி.

  “திக்ஷு ஸர்வாஸு மார்கந் தே ஸேய மாஸாதிதா மயா”

 
என்பது, ஸ்ரீராமா. சுந். 30 : 3.