|
வ
வினையாட்டியேன் -
1கைப்புகுந்தவனைக் கைகழிய விட்டு உங்கள் காலிலே விழும்படியான பாவத்தைச் செய்துள்ளேன்.
2உங்களுக்குக் குணங்கள் சொரூபமானாற்போலே யன்றோ எனக்குப் பாவம் சொரூபமானபடி.
நான் - 3“தர்மத்தால் காப்பாற்றப்பட்டோம்” என்று இருப்பான் அவன் கண்டீர்! நான்
இரந்தேன் - அத் தலை இத்தலையானபடி. 4ஸ்ரீஜனகராஜன் திருமகளான வேண்டற்பாட்டோடே
அன்றோ தான் தூதுவிடுகிறது இவள்! இரந்தேன் - 5மேலே, அவன் திருவடிகளிலே நான்குமுறை
சரணம் புக்கார்; இப்போது அவன் அடியார்கள் பக்கலிலே சரணம் புகுகிறார்: 6அது தப்பிலும்
இது தப்பாதே அன்றோ. 7இதற்கு வேறு விலக்கடி இல்லையே. 8பிரார்த்தித்தலாகிற
புத்தியன்றோ சரணாகதி ஆகிறது. 9தப்புதல் இல்லாத உபாயத்தைப் பற்றுகிறாள். இனங்காள்
இரந்தேன் -
1. “இரந்தேன்” என்றதனைக்
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
‘கைப்புகுந்தவனை’ என்று தொடங்கி.
2. “நன்னலம்” என்றதனைக்
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
‘உங்களுக்கு’ என்று தொடங்கி.
3. “நரன்” என்றதற்கு,
அவனினின்றும் வேறுபடுத்திப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘தர்மத்தால்’ என்று தொடங்கி. “தர்மத:
பரிரக்ஷிதா:”
என்பது. இதனை விவரணம் செய்கிறார் ‘அத்தலை இத்தலையானபடி’
என்று.
4. “நான்” என்று, தன்னைப்
போரப்பொலிய அபிமானிக்கிறது, ஸ்ரீ
ஜனகமஹாராஜன் திருமகளான பெருமையை நினைத்தன்றோ என்று
வியாக்யாதா ஈடுபடுகிறார் ‘ஸ்ரீ ஜனகராஜன்’ என்று தொடங்கி.
5. “இரந்தேன்” என்பதற்குச்
சுவாபதேசப்பொருள் அருளிச்செய்கிறார்
‘மேலே’ என்று தொடங்கி. “வைகல் பூங்கழிவாய்” என்ற
திருவாய்மொழியின்
முன்னுரையையும், அதன் குறிப்புரையையும் காண்க.
6. அதனைக் காட்டிலும் இதற்கு
ஏற்றம் யாது? என்ன, ‘அது தப்பிலும்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
7. தப்பாமைக்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார் ‘இதற்கு’ என்று
தொடங்கி. என்றது, பகவத் விஷயத்துக்குச் சுவாதந்திரியமாகிற
விலக்கடி
உண்டு; அடியார்களுக்கு அது இல்லை என்றபடி. விலக்கடி - தடை.
8. “இரந்தேன்” என்றால்,
சரணாகதியைக் காட்டுமோ? என்ன,
‘பிரார்த்தித்தலாகிற’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
9. பக்தி
முதலான உபாயங்களைவிட்டு, பிரபத்தியில் இழிகைக்குக் காரணம்,
பிரபத்தி அமோகமாயிருக்கையாலே
என்று திருவுள்ளம்பற்றி
அருளிச்செய்கிறார் ‘தப்புதல் இல்லாத’ என்று தொடங்கி.
|