|
1ம
1மிதுனமாயிருப்பார்க்கு
இரந்தார்வாசி தெரியுமன்றோ. 2சரணாகதி செய்தவர்கட்குத் தன் உயிரைக் கொடுக்குமவையே.
நல் 3நலம் புள் இனங்களுக்கு அன்றியே படுகொலைக்காரர்க்கும் இரங்க வேண்டும்படி
அன்றோ என்னுடைய நிலை நல் நலம் புள்ளினங்காள் இரந்தேன் - 4சரணாகதி அடைதற்கு
உரிய குணங்கள் உங்களிடம் குறைவற்றிருந்தபடி என்தான்! நான் இரந்தேன் - 5அவன்
அன்றோ “சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்” என்று குரங்கின்காலில் முற்பட விழுந்தான்;
பின்பே அன்றோ இவள் 6“என்னிடத்தில் அப்படி அருளைச் செய்யும்” என்றது. வினையாட்டியேன்
நான் இரந்தேன் - 7எல்லாம் கொடுத்தாலும் அவற்றுக்கு ஒன்றும் செய்ததாகத் தோற்றாதே
பல்காட்டுகிறாள். 8அவர்கள் செய்கிற உபகாரம்
1. “இனங்காள்” என்று
இருவரை விளித்து, “இரந்தேன்” என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘மிதுனமாய்’ என்று
தொடங்கி.
2. தெரிகைக்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார் ‘சரணாகதி செய்தவர்கட்கு’
என்று தொடங்கி.
3. “நன்னலப் புள்ளினங்காள்!
இரந்தேன்” என்ன, அமைந்திருக்க,
“வினையாட்டியேன்” என்று தன் குறைவினைச் சொல்லுகிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘நல்நலப் புள்ளினங்களுக்கு’ என்று
தொடங்கி.
4. இவள் செய்யும் சரணாகதிக்கு,
இவைகள் தாம் தக்கவைகளோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சரணாகதியடைதற்குரிய’ என்று
தொடங்கி. ‘சரணாகதி அடைதற்குரிய குணங்கள்’ என்றது, “நலம்” என்ற
சொல், வாத்சல்யம் முதலிய
குணங்களையும், “புள்” என்ற சொல்,
(இருசிறகு) ஞான அநுஷ்டானங்களையும், “இனம்” என்ற
சொல்,
புருஷகாரத்தையும் கூறுகின்றன என்றபடி.
5. மேலே, ‘அத்தலை இத்தலையானபடி’
என்று கூறிய வாக்கியத்தை
விவரணம் செய்கிறார் ‘அவன் அன்றோ’ என்று தொடங்கி.
“பிதாயஸ்ய புராஹி ஆஸீத்
சரண்ய: தர்மவத்ஸல:
தஸ்யபுத்ர: ஸரண்யஸ்ய
ஸுக்ரீவம் ஸரணம்கத:”
என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 19.
6. “ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம்
ததா குரு தயாம் மயி”
என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.
7. “பொன்னுலகாளீரோ” என்றதன்பின்,
“வினையாட்டியேன்” என்று தன்
குறைவினைச் சொல்லுகையாலே போதரும் ஓர் அர்த்தவிசேடத்தை
அருளிச்செய்கிறார் ‘எல்லாம் கொடுத்தாலும்’ என்று தொடங்கி.
8. பல் காட்டுவது
என்? ஒத்ததான கைம்மாறு ஒன்றனைச் செய்யலாகாதோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவர்கள் செய்கிற’ என்று
தொடங்கி.
|