பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
352

அள

அளவுபட்டிருக்கில் அன்றோ ஒப்பாக ஒன்று தேடிக் கொடுக்கலாவது. 1எல்லாம் கொடுத்தாலும் “பணிவிடை செய்யக்கடவன், உலக முழுதினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஆசாரியன் செய்த உபகாரத்திற்குக் கொஞ்சமும் ஒப்பாகமாட்டாது” என்று, செய்தது போராது என்னும் இதுவே அன்றோ நெஞ்சில் பட்டுக் கிடப்பது. 2‘அவருக்குத் துரோகம் செய்யக்கூடாது” என்னுமளவில் நிற்குமதன்றே; 3“இவனுடைய உபகாரத்தை அறிந்தவனாய்” இருக்க வேண்டும்.

    4
அங்கு நின்றும் மீண்டாலன்றோ அதுதான் வேண்டுவது. என்றது, அவன்செய்த உபகாரத்தினின்றும் மீண்டாலன்றோ துரோகம்கூடாது என்று சொல்லவேண்டும் என்றபடி. இவை எல்லாம் சொல்லவேணுமோ? அவன்தான் வரும் சுபாவனாகில் அன்றோ நாங்கள் அறிவிப்பது? என்னில், என் பாவத்தாலே இழந்தேனத்தனை போக்கி, அவன் படியைப் பார்த்தால் இழக்கவேணுமோ என்கிறாள். முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் - 5அழிந்தனவற்றை அடியே பிடித்து உண்டாக்குமவன் கண்டீர்! இத்தலையும் அழிந்தன்றோ கிடக்கிறது. 6யார் பிரிவுக்குச் சளைத்

 

1. இதனால், அவைகள் பக்கல் இவளுக்குண்டான செய்ந்நன்றியறிவு
  பிரகாசிக்கிறது என்னுமதனைப் பிரமாண பூர்வகமாக அருளிச்செய்கிறார்
  ‘எல்லாம் கொடுத்தாலும்” என்று தொடங்கி.

  “யோ தத்யாத் பகவத்ஜ்ஞானம் குர்யாத் தர்மோபஸேசனம்
   க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந”

  என்பது, பாரதம்.

2. இதனால், பலித்த பொருளை அருளிச்செய்கிறார் ‘அவருக்கு’ என்று
  தொடங்கி.

  “யஸ்மாத் தர்மாந் ஆசிநோதி ஸ ஆசார்யா:
   தஸ்மை ந த்ருஹ்யேத் கதாசந”

  என்பது, ஆபஸ்தம்ப தர்ம சூத்.

3. “க்ருதம் அஸ்ய ஜாநந்”

  என்பது, பாரதம் உத்யோகபர். திருதராஷ்டிரனைப் பார்த்துச் சனத்
  சுஜாதர் கூறியது.

4. “முன்னுலகங்கள் எல்லாம்” என்பதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார்
  ‘அங்கு நின்றும்’ என்று தொடங்கி. ‘மீண்டாலன்றோ’ என்றது,
  போனகாரியத்தைச் செய்து அங்கு நின்றும் மீண்டால் அன்றோ என்றபடி.

5. அவன்படி யாது? என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அழிந்தனவற்றை’ என்று தொடங்கி.

6. “உலகம்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘யார் பிரிவுக்கு’ என்று
  தொடங்கி.