|
New Page 1
துத் தளர்ந்து தூதுவிட
இவற்றை உண்டாக்கிற்று? வெறும் தன் கிருபையாலே செய்தானித்தனை அன்றோ! 1பண்டு
இவனுக்கு ஆர்த்த ரக்ஷணம் செய்வதற்குத் தூதுவிடவேண்டா கண்டீர்! 2தண்ணீர், தறை என்ற
வேறுபாடு பாராதே “பல பொருள்களாக ஆகக்கடவேன்” என்கிற சங்கல்பத்தாலே ஏற்கெனவே இவற்றை உண்டாக்கினவன்.
தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு என்பாள் ‘முகில்வண்ணன்’ என்கிறாள். அன்றிக்கே,
தன்பேறாகக் கொடுக்குமவன் என்னலுமாம். முகில்வண்ணன் கண்ணன் - 3உலகத்திற்குக்
காரணமாயிருக்குந் தன்மைக்கும் அவதாரத்துக்கும் அடியான ஒளதார்யம் முதலான குணங்களைச்
சொல்லுகிறது. 4அன்றிக்கே, பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே
வந்து அவதரித்தபடியைச் சொல்லிற்றாகவுமாம். என் நலம் கொண்ட பிரான் - 5இது
ஒரு பழங்கிணறு கண்வாங்குகிறது என்? என்னுடைய எல்லாச் செல்வங்களையும் கவர்ந்த உபகாரகன்;
6உங்கள் காலிலே விழும்படி செய்தவன். இப்போது அகல இருந்தது ஒழியப்
1. “முன்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பண்டு இவனுக்கு’ என்று
தொடங்கி. ஆர்த்தரக்ஷணம் - துன்புறுகின்றவர்களைக்
காத்தல்.
2. “எல்லாம்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘தண்ணீர் தறை’ என்று
தொடங்கி. “பஹுஸ்யாம்” என்பது, சுருதி.
3. “வண்ணன்” என்றதற்கு,
கொடுக்குமவன் என்று பொருள்
சொன்னதற்குச்சேர, “முன்னுலகங்கள் எல்லாம் படைத்த” என்றதனோடும்
கூட்டி, “கண்ணன்” என்ற பதத்துக்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘உலகத்திற்குக் காரணமாயிருக்கும்’
என்று தொடங்கி.
4. “வண்ணன்” என்றதற்கு,
வடிவு என்ற பொருளுக்குச் சேர, “கண்ணன்”
என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’
என்று தொடங்கி.
5. அவன் வருவான் என்பதற்கு,
‘உலகத்தை எல்லாம் படைத்தவன்’ என்று
முன்புசெய்தது ஒன்றனைச் சொல்லவேண்டுமோ? என்னைத் தனக்கு
ஆக்கினதே போராதோ ‘அவன் வருவான்’ என்று நிச்சயிப்பதற்கு?
என்கிறாள் ‘இது ஒரு பழங்கிணறு’
என்று தொடங்கி. கண்வாங்குகை - தூர்
எடுத்தல்.
6. அவனைப்
பிரிந்து வருந்துகிற நிலையிலே ‘உபகாரகன்’ என்கிறவளுடைய
மனோபாவத்தை இரண்டு வகையாக
அருளிச்செய்கிறார் ‘உங்கள் காலிலே’
என்று தொடங்கியும், ‘இப்போது’ என்று தொடங்கியும்.
என்றது, உலகத்தார்
தன்னை மறந்து உண்டு உடுத்துத் திரியாநிற்க, எனக்குத் தன்பக்கல்
பிராவண்யத்தை
உண்டாக்கி, உங்கள் காலிலே விழச்செய்த உபகாரகன்
என்கிறாள் என்பது, ‘உங்கள் காலிலே’ என்று
தொடங்கும்
வாக்கியத்துக்குக் கருத்து. இப்போது அகல இருந்தானேயாகிலும்,
உலகத்தைப் படைத்து,
அவதரித்து என்னை வசீகரித்து என்னோடே
கலந்து இப்படிப் பல உபகாரங்களைச்செய்தவன் என்பது,
பின்வாக்கியத்துக்குக் கருத்து.
|