|
பண
பண்டு செய்தவைஎல்லாம்
சால நன்று கண்டீர்! 1எங்களோடு கலப்பதற்கு முன்பு போர நீர்மையுடையான்; இப்போது
வடிவழகே கண்டீர் உள்ளது. என் நலம் கொண்ட முகில் வண்ணன் - 2அம்மேகம் பெய்யும்
இடமாகாமல், முகக்கும் இடமானேன்.
தனக்கு என் நிலைமை
- அவன் வருவானானாலும், நாங்கள் சொல்லுவது ஏது? என்னில், ‘என் நிலைமை’ என்று தன் வடிவைக்
காட்டுகிறாள். 3“இந்த எங்களுடைய சரீரத்தைப் பார்த்தருள வேண்டும்” என்னுமாறு
போலே. 4என்னைக் கண்ட நீங்களே பாசுரமிட்டுச் சொல்லுமத்தனை. 5உலகத்திற்குக்
காரணனாயிருத்தல், அவதாரம், தன்பக்கல் செய்த விசேஷகடாக்ஷம், இவை எல்லாம் கண்ணழிவறச்
சொன்னாள்; அவனுடைய குணங்களிலே மூழ்கின தன் படிகள் தன்னாலும் பேசப் போகிறதில்லை; தனக்கும்
தன் தன்மை அறிவரியானைப் போலே. உரைத்து - 6தனக்குங்கூட நிலமல்லாத தன்படியை
இவை பாசுரமிட்டுச் சொல்லவற்றாகக் கொண்டிருக்கிறாள். 7கரைமேலே நிற்கையாலே
அவற்றுக்குச் சொல்லலாமன்றோ. ‘உரைத்துக்கொண்டு வாருங்கோள்’ என்னாது ஒழிவான் என்? என்னில்,
‘ஈசுவரன் செயல் நமக்குப் பரமோ’ என்று
1. ‘இப்போது அகல இருந்தானேயாகிலும்’
என்று தொடங்கி மேலே
அருளிச்செய்த வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘எங்களோடு
கலப்பதற்கு’
என்று தொடங்கி. கலப்பதற்கு முன்பு - கலந்து பிரிவதற்கு
முன்பு.
2. “முகில் வண்ணன்” என்பதற்கு,
ஒளதார்யபரமாக அருளிச்செய்த
பொருளைத் திருவுள்ளம்பற்றி வெறுப்பாக, பாவம் அருளிச்செய்கிறார்
‘அம் மேகம்’ என்று தொடங்கி.
3. வடிவைக் காட்டினதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘இந்த எங்களுடைய’
என்று தொடங்கி. “ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம்
பாவி தாத்மநாம்”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். ஸ்ரீராமனைப் பார்த்து முனிவர்கள் கூறியது.
4. அவனுக்கு நாங்கள்
சொல்ல வேண்டியது யாது? என்றதற்கு, வடிவைக்
காட்டினால் போதியதாமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘என்னைக்கண்ட’ என்று தொடங்கி.
5. நீங்களே பாசுரமிட்டுச்
சொல்லுமத்தனை என்பது ஏன்? தன்னால் சொல்ல
ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘உலகத்திற்குக்
காரணனாயிருத்தல்’ என்று தொடங்கி.
6. தன்னாலும் சொல்ல
முடியாததனை இவற்றால் சொல்லமுடியுமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தனக்குங்கூட’ என்று
தொடங்கி.
என்றது, இவளுடைய எண்ணத்தின் விசேடம் இருக்கிறபடி என்பது கருத்து.
7. அதற்கே,
வேறும் ஒரு பரிகாரம் அருளிச்செய்கிறார் ‘கரை மேலே’ என்று
தொடங்கி. என்றது, தன்னைப்போன்று
இவைகள் பகவத் குணங்களில்
மூழ்காமையாலே சொல்லலாம் என்பது கருத்து.
|