பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
356

    ஈடு :- இரண்டாம்பாட்டு. 1சில கிளிகளைக் குறித்து என் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்து வந்து, நானும் என் தோழிமாரும் கொண்டாட அதனை அங்கீகரிக்கவேணும் என்கிறாள்.

    2
முதற் பாசுரத்தில் ‘அவன் பதம் கொடுத்தாள்; அதற்கு மேலே ஒருபதம் தேடிக்கொடுக்கிறாள் இப் பாசுரத்தில். அவன் பதமாகிறது, உபய விபூதியையும் கொடுக்கை அன்றோ, அதற்கு மேலான பதமாகிறது, அவனாலே விரும்பப்படும் தன்னைக்கொடுக்கை. தன்னைக் கொடுக்குமிடத்திலும், ‘பின்னை முன்னே’ என்னாதே, எல்லாரும் காணக் கைமேலே அன்றோ கொடுக்கப் புகுகிறது. மை அமர்வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து-3அவன்பாடு தரம்பெற்றாரைக் கொண்டாடுவாரைப் போலேயோ, என்பாடு தரம் பெற்றாரைக் கொண்டாடுவார் இருப்பது! 4அந்தப்புரத்தில் வசிப்பவர் எல்லாரும் ஒருபடிப்பட்டிருக்கிறபடி; 5ஒருகண் பார்வையாய் இருக்கிறபடி. 6“தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்

 

1. “கிளிகாள்! மெய்யமர் காதல் சொல்லி, வந்து மங்கைமார் முன்பு” என்பன
  போன்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. மேற்பாசுரத்தில் “பொன்னுலகாளீரோ” என்பது போன்றவைகளைத்
  திருவுள்ளம்பற்றி, இந்தப் பாசுரத்திற்கு ஓர் ஏற்றம் அருளிச்செய்கிறார்
  ‘முதற்பாசுரத்தில்’ என்று தொடங்கி. அவன் பதமாவது, உபய
  விபூதிகட்கும் நாதனாக இருத்தல். “மங்கைமார் முன்பு” என்றதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘தன்னைக் கொடுக்குமிடத்திலும்’ என்று தொடங்கி.

3. “மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார்” என்று விசேடித்ததற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘அவன்பாடு’ என்று தொடங்கி. ‘அவன்பாடு
  தரம்பெற்றார்’ என்றது, திருவடியை. ‘கொண்டாடுவார்’ என்றது,
  வானரங்களை, கொண்டாடுதலைக் கம்பராமாயணம் சுந்தரகாண்டம், திருவடி
  தொழுத படலத்தில் முதல் 6-செய்யுட்களில் காண்க. ‘என்பாடு தரம்
  பெற்றாரைக் கொண்டாடுவார் இருப்பது’ என்றது, இவள் கறுத்த
  கண்களையுடையவளாகையாலே, இவளோடு
  ஒப்புமையுடையவர்களாயிருப்பார்கள் என்றபடி. ‘என்பாடுதரம்பெற்றார்’
  என்றது, கிளி முதலாயினவற்றை.

4. தன்பாடு தரம்பெற்றாரைக் கொண்டாடுகின்றவர்கட்கு ஏற்றம் ஏது? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அந்தப்புரத்தில்’ என்று தொடங்கி.

5. ஒருபடிப் பட்டிருத்தலை விவரணம் செய்கிறார் ‘ஒருகண் பார்வையாய்’
  என்று தொடங்கி. ‘ஒருகண் பார்வையாய்’ என்றது, எல்லாரும் கறுத்த
  கண்களையுடையவர்களாய் இருத்தலைக் குறித்தபடி. எல்லாரும் ஒரு
  கண்ணாலே பார்க்கலாம்படி இருப்பர்கள் என்பது வேறும் ஒருபொருள்.

6. எல்லார் கண்களும் இவள் கண்களைப்போன்று இருக்கக் கூடுமோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தம்மையே’ என்று தொடங்கி. இது,
  பெரிய திருமொழி,  11. 3 : 5.