|
தம
தம்மையே ஒக்க அருள்செய்வர்”
என்கிறபடியே, இவளும் தன்னோடு எல்லாவகையாலும் ஒப்புமை கொடுத்து வைத்தபடி. மை அமர் - 1“கறுத்த
கண்களையுடையவள்”, “கருந்தடங்கண்ணி” என்று சொல்லுகிற ஏற்றமெல்லாம் இவளுக்கும் உண்டே அன்றோ.
தன்னைப்போலே கண்ணில் இயல்பாகவே அமைந்த கறுப்பைச் சொல்லிற்றாதல்; அன்றிக்கே, மங்களத்தின்
பொருட்டு இடும் மையைச் சொல்லிற்றாதல். 2இவள், கணவனைப் பிரிந்திருக்கிற காலத்தில்
இவர்கள் மை எழுதி இருக்கக் கூடாதே அன்றோ; நீங்கள் வந்தால் இவர்கள் கண்களில் இருக்கும்படி
பாரீர்கோள்! வாள் - ஒளி. அதுவும் அழிந்தன்றோ கிடக்கிறது. 3இவள் வடிவு புகர்
அழிந்து கிடக்க, இவர்கள் கண்களில் ஒளி உண்டாகக் கூடாதே. நெடும் கண் - 4கண்ணில்
பரப்பு அடங்கலும் பிரயோஜனத்தோடுகூடி இருப்பது அப்போதே அன்றோ. இல்லையாகில், தலைச்சுமையைப்
போன்றதேயாம் அன்றோ. 5“காணாதார் கண் என்றும் கண்ணல்ல” என்கிறபடியே. மை
அமர் வாள் நெடும் கண் - 6உங்கள் வரவால் வந்த பிரீதியாலே ‘அவன்வரவு தப்பாது’
என்று நான் அலங்கரிக்க, அத்தாலே அலங்கரித்து ஒளியை யுடைத்தாய்ப் பெருத்திருந்துள்ள
1. தன்னை ஒத்த தன்மையைக்
கொடுத்தற்கு, தன் தன்மை யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கறுத்த’ என்று தொடங்கி.
“அஸிதேக்ஷணா” என்பது, ஸ்ரீராமா. சுந். 6. 5 : 4. “கருந்தடங்கண்ணி”
என்பது, திருவாய். 6. 5 :
8.
2. “மையமர்கண்” என்பதற்குக்
கூறிய இரண்டாவது பொருளில், தலைவி
தளர்ந்திருக்க, இவர்களுக்கு இந்த அலங்காரம் கூடுமோ? என்ன,
‘இவள்,
கணவனை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. அழிந்து கிடப்பான் என்?
என்ன, ‘இவள் வடிவு’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
4. மையும் ஒளியும்,
தூதுபோய் மீண்டபின் உண்டாகலாம், நெடுமை உண்டாம்
என்கிறது கூடாதே? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கண்ணில்
பரப்படங்கலும்’ என்று தொடங்கி. ‘அப்போதே அன்றோ’ என்றது,
தூதுபோய் மீண்டுவந்த உங்களைக் கண்டபோது அன்றோ என்றபடி.
‘இல்லையாகில்’ என்றது, இவைகள்
வராவிட்டால் என்றபடி.
5. அப்படித் தலைச்சுமை
ஆகுமோ? என்ன, ‘காணாதார்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது, கண்களால்
பிரயோஜனம்
இல்லை என்றபடி. இது, பெரிய திரு. 11. 7 : 1.
6.
‘நீங்கள் வந்தால்’ என்று தொடங்கி மேலே அருளிச்செய்த வாக்கியத்தை
விவரணம் செய்கிறார்
‘உங்கள் வரவால்’ என்று தொடங்கி.
|